வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி மற்றும் சூரி ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்த திரைப்படம் தான் விடுதலை. இப்படத்தின் முதல் பாகம் இன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது. வெற்றிமாறனின் படம் என்பதால் ரசிகர்களும் திரையரங்குகளுக்கு சென்று முதல் நாள் முதல் காட்சியை பார்த்துவருகிறார்.
விடுதலை படத்தின் முதல் பாகம் - இடைவேளை அருமையாக இருக்கிறது. ஓப்பனிங் ஷாட் நன்றாக இருக்கிறது என கூறி ஃபயர் விட்டிருக்கும் ரசிகர்கள் சூரியின் நடிப்புக்கு தம்ப்ஸ் அப் கொடுத்திருக்கிறார்கள். அதேபோல் விடுதலை உலகத்திற்கு நல்ல அறிமுகம் எனவும், ஏகப்பட்ட குறியீடுகள் இருப்பதாகவும் தெரிவித்து வருகின்றார்கள்.
இந்த நிலையில் இப்படத்தில் கதாநாயகியாக நடித்த நடிகர் ஜி.பி பிரகாஷின் தங்கையான பாவனி ஸ்ரீக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்புக் கிடைத்து வருகின்றது. இந்த நிலையில் இவர் பிரபல சேனலுக்கு பேட்டியளித்திருந்தார். அதில் இவருடைய அண்ணியும் பாடகியுமான சைந்தவி குறித்து கேட்கப்பட்டது.
அதற்கு பதில் கூறிய பாவனிஸ்ரீ அவங்க ரொம்பவே சுவீட் எனக்கு ஒரு நல்ல பிரண்ட். என்ன விஷயமாக இருந்தாலும் அவங்க கிட்ட நம்பி சொல்லலாம். எல்லாவற்றுக்கும் எனக்கு சர்ப்போட் பண்ணிட்டே இருப்பாங்க. எங்க ரெண்டு பேருக்குள்ளும் நல்ல ப்ரண்ஷிப் இருக்கு என்றும் அவர் தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!