தமிழ் சினிமாவில் உச்ச நாயகனாகத் திகழ்ந்து வருபவர் நடிகர் கமல் ஹாசன். அதுமட்டுமல்லாது இவர் உலக நாயகன் என்றும் புகழப்பட்டு வருகின்றார். இவர் நடிப்பில் தனித்திறமை கொண்ட ஒருவராக விளங்கி வருகின்றார்.
இதனால் அவருடன் நடிக்கும் பல நட்சத்திரங்கள் அவருடன் இணைந்து நடிப்பதற்கு பதட்டப்படுவார்கள். அதுமட்டுமல்லாது ஒரு சில நடிகைகள் தெறித்து ஓடிய வரலாறும் உண்டு.
இவ்வாறு கமல்ஹாசனைப் பார்த்துப் பலரும் பயப்பிடுகையில் கமல் ஹாசனே பயந்து போகும் அளவிற்கு இருந்தவர் தான் நடிகை ஊர்வசி. இதுகுறித்து சமீபத்தில் கிரேசி மோகன் ஒரு வீடியோவில் பகிர்ந்துள்ளார். அதில் கமல் ஹசன் மிரண்டு போய் பேசிய சம்பவம் ஒன்றினையும் பகிர்ந்துள்ளார்.
அதாவது கமலுடன் இணைந்து நடிகை ஊர்வசி 'மைக்கேல் மதன காமராஜன், மகளிர் மட்டும்' போன்ற இரு படங்களில் நடித்துள்ளார். அப்படங்களில் நடிக்கும் போது கமலே ஆச்சரியப்படும் வகையில் ஊர்வசி, தன் சொந்தமான டயலாக்குகளால் தூள் கிளப்பி இருக்கிறார்.
அதுமட்டும் இல்லமால் அவருடன் நடிக்கும் போது பார்த்து தான் நடிக்க வேண்டும். நம்மையே கீழே தள்ளும் அளவிற்கு நடிக்கிறாரே என்று கமல் ஹாசனே பயந்து போய், அவரைப் பற்றிப் புகழ்ந்து கூறியுள்ளாராம். அந்தளவிற்கு திறமையான நடிப்பை வெளிப்படுத்தி நடிப்பில் அப்படியே ஒன்றிவிடுவாராம் நடிகை ஊர்வசி.
Listen News!