நடிகர் அஜித் மூன்றாவது முறையாக எச். வினோத்துடன் இணையும் திரைப்படம் தான் AK61. இப்படத்தினை போனிகபூர் தான் தயாரித்து வருகின்றார். இப்படத்தின் படப்பிடிப்பானது ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் நடைபெற்று வருகின்றது.
AK 61 படத்தில் ஒளிப்பதிவாளராக நிரவ் ஷா பணியாற்றுகிறார். இந்த படத்தில் நடிகை மஞ்சு வாரியர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சார்பட்டா பரம்பரை படத்தில் வேம்புலி கதாபாத்திரத்தில் நடித்த ஜான் கொக்கென் இந்த AK61 படத்திலும் நடித்து வருகிறார். நடிகர் வீராவும் AK61 படத்தில் நடிப்பதை உறுதி செய்துள்ளார்.
இந்நிலையில், AK61 படத்திற்காக 47 நாட்கள் தொடர்ச்சியாக ஹைதராபாத்தில் படக்குழு படப்பிடிப்பு நடத்தி உள்ளனர். முதல் கட்ட படப்பிடிப்பு ஐத்ராபாத்தில் நிறைவடைந்தது.
இரண்டாம் கட்ட படப்பிடிப்பு புனேயில் ஜூன் 15ஆம் தேதி முதல் ஆரம்பமாகின்றது எனக் கூறப்படுகின்றது. இது குறித்த தகவல் விரைவில் வெளியாகும் என்று ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகின்றது.
பிற செய்திகள்
- விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா தம்பதியினருக்கு சமூக வலைத்தளங்களில் வாழ்த்துத் தெரிவித்த பிரபலங்கள்
- தனுஷுடன் ரஞ்சினியாக ஜோடி சேரும் ப்ரியா பவானி ஷங்கர் – திருச்சிற்றம்பலம் படத்தின்லேட்ஸ்ட் அப்டேட்
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!