தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக வலம் வருபவர் அஜித். இவர் நடிப்பில் இறுதியாக வெளியாகிய திரைப்படம் வலிமை. இப்படத்தை இயக்குநர் எச். வினோத் இயக்கியிருந்தார். இதனைத் தொடர்ந்து தற்பொழுது எச். வினோத் இயக்கத்தில் புதிய படத்தில் நடித்து வருகின்றார்.
இப்படம் அஜித்தினுடைய 61வது படம் என்பதோடு இப்படத்திற்கு தயாரிப்பாளர் போனிகபூர் தான் தயாரித்து வருகின்றார்.ஹைதராபாத்தில் அதிக செலவில் செட் அமைக்கப்பட்டு ஷுட்டிங் விறுவறுப்பாக நடைபெற்று வருகின்றது.
ஏகே61 கதையை ஹெச்.வினோத் உண்மை சம்பவங்களில் அடிப்படையில் தான் எழுதி இருக்கிறாராம். வங்கி கொள்ளை மையப்படுத்திய கதை என்றும் உண்மையாக நடந்த சம்பவங்களை வைத்து தான் இயக்குநர் அனைத்தையும் வடிவமைத்து இருக்கிறார் என சொல்லப்படுகிறது.
இருப்பினும் இதை ஹெச்.வினோத் அதிகாரபூர்வமாக உறுதி செய்யவில்லை. இந்த வருடம் தீபாவளி பண்டிகைக்கு ஏகே61 படம் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் ஷூட்டிங் அதற்கு முன்பே ஆகஸ்ட் மாதத்தில் முடிக்கப்படும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
பிற செய்திகள்
- ‘எனது மகள் தங்கம் வெல்வது தான் எனது இலக்காக உள்ளது’- தலைவாசல் விஜய்யின் சுவாரஸியமான தகவல்
- குக்வித் கோமாளி சீசன் 3 இன் போட்டியாளரான முத்துக்குமாரின் மகனா இது-சூப்பர் கியூட்டாக இருக்கின்றாரே
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!