• Sep 22 2024

ஆஸ்கார் விருதுக்கு தேர்வாகிய பிரபல படங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகியாச்சு

stella / 2 years ago

Advertisement

Listen News!

உலக திரைத்துறையின் உயரிய விருதாகக் கருதப்படுவது ஆஸ்கார் விருது ஆகும்.இந்த விருது ஆனது சிறந்த படம், சிறந்த நடிகர், நடிகை, தொழில்நுட்பக் கலைஞர்கள் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் ஆண்டுதோறும் வழங்கப்படுவது வழக்கம்.

இதில் சிறந்த சர்வதேச திரைப்படம் (Best International Feature Film) என்ற பிரிவிற்கு பல்வேறு நாட்டிலிருந்து பல்வேறு திரைப்படங்கள் அனுப்பப்பட்டு வருகின்றன. 

அந்த வகையில் 2023ஆம் ஆண்டிற்கான ஆஸ்கர் விருதில் இந்தியா சார்பாக போட்டியிட குஜராத்தி படமான 'செல்லோ ஷோ'  படம் தேர்வாகியுள்ளது. பேன் நளின் இயக்கத்தில் வெளியான இப்படம் ஏற்கனவே சில சர்வதேச திரைப்பட விழாவில் பங்கேற்று விருதுகளை வாங்கியுள்ளது. 

இதனிடையே ராஜமௌவுலியின் 'ஆர்.ஆர்.ஆர்', விவேக் அக்னிஹோத்ரியின் 'தி காஷ்மீர் பைல்ஸ்' உள்ளிட்ட சில படங்கள் இந்தியா சார்பாக ஆஸ்கருக்கு அனுப்பப்படும் தேர்வு போட்டி பட்டியலில் இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Advertisement