• Sep 21 2024

என் அன்பை தாங்கிக் கொள்வதில் சிறந்தவள்- குக்வித் கோமாளி புகழின் அம்மாவைப் பார்த்திருக்கின்றீர்களா?

stella / 1 year ago

Advertisement

Listen News!

கடலூரை சார்ந்த புகழ் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவராகத் தான் இருந்திருக்கிறார். நடிப்பின் மீது இருந்த ஆர்வத்தின் காரணமாக இவர் சென்னை கிளம்பி சென்றிருக்கிறார். சென்னை வந்த நேரத்தில் இவருக்கு சரியான வேலை கிடைக்காமல் இருந்திருக்கிறது. திரைப்படங்களிலும், சின்னத்திரையிலும் கலந்து கொள்வதற்கு வாய்ப்பு ஆரம்பத்தில் கிடைக்காமல் இருந்திருக்கிறது. 

அந்த நேரத்தில் புகழ் கார் செட் ஒன்றில் வேலை செய்து அங்கே தான் தங்கி இருந்திருக்கிறார். அங்கே இருந்து தான் டிவி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக வாய்ப்புகளைத் தேடிக் கொண்டிருக்கிறார். அப்போது விஜய் டிவியில் ஒரு சில நிகழ்ச்சிகளில் இவருக்கு சைடு ரோலில் நடிக்க வாய்ப்பு கிடைத்து இருக்கிறது.


தனக்கு கிடைத்த வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தி ஆரம்பத்தில் பெண் வேடமிட்டு பலரை சிரிக்க வைத்தாலும் தன்னுடைய நிஜ முகத்தை குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலமாகத்தான் பலருக்கும் புகழ் காட்டி இருந்தார். குக் வித் கோமாளி நிகழ்ச்சி புகழுக்கு பெரிய அளவில் அடையாளத்தை கொடுத்திருந்தது. 

தற்போது சின்ன திரையில் இருந்து வெள்ளி திரையில் காமெடி நடிகராக அறிமுகம் ஆகி கதாநாயகனாகவும் ஆகிவிட்டார்.அத்தோடு முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்தும் வருகின்றார்.இவருக்கு அண்மையில் தான் திருமணமும் நடைபெற்றது.


இந்த நிலையில் புகழின் அம்மா இன்றைய தினம் தனது பிறந்தநாளைக் கொண்டாடுகின்றார். அவருக்கு வாழ்த்துத் தெரிவித்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகழ் பதிவொன்றைப் போட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.






Advertisement

Advertisement