இயக்குநர் வெங்கி அட்லுரி இயக்கத்தில் பிரபல நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் வாத்தி. இப்படத்திற்கு ஜி.வி பிரகாஷ் இசையமைத்துள்ளதோடு இப்படத்தின் படப்பிடிப்பானது முடிவடைந்து இறுதிக்கட்ட போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த படம் அடுத்த மாதம் ரிலீஸ் ஆகலாம் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் இந்த படத்தின் சிங்கிள் பாடல் சற்றுமுன் வெளியாகியுள்ளது
தனுஷ் எழுதிய இந்த பாடலை ஸ்வேதா மேனன் பாடியுள்ளார் என்பதும் இந்த பாடலை இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் கம்போஸ் செய்துள்ளார்.மெலடி பாடலாக அமைந்திருக்கும் இந்த பாடலை இசை ரசிகர்கள் ரசித்து வருகின்றனர்.
தனுஷ், சம்யுக்தா ஹெக்டே, சாய் குமார் உள்பட பலர் நடித்துள்ள இந்த படம் தமிழ் தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் ரிலீஸ் ஆக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!