லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாக தயாராகி இருக்கும் திரைப்படம் லியோ. இப்படமானது அக்டோபர் 19 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. மேலும் இந்த திரைப்படம் ஒரு ஆக்ஷன் த்ரில்லர் மற்றும் லோகேஷ் சினிமாடிக் யுனிவர்ஸின் ஒரு பகுதியாகும் .
இப்படத்தின் கதாநாயகனாக விஜய் நடிக்க அவருடன் இணைந்து த்ரிஷா, சஞ்சய் தத் , அர்ஜுன், கவுதம் வாசுதேவ் மேனன் மற்றும் பிரியா ஆனந்த் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். படம் வெளியாக இன்னும் 1மாதம் மட்டுமே எஞ்சி உள்ள நிலையில் தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் படம் வெளியாவதற்கு முன்னரே டுவிட்டரில் சாதனை படைத்துள்ளது. அதாவது டுவிட்டரில் 25 மில்லியன் ( 2.5 கோடி ) பதிவுகளை லியோ ஹேஸ்டேக் கடந்துள்ளது. படம் வெளிவருவதற்கு முன்னரே இவ்வளவு பரபரப்பை லியோ திரைப்படம் ஏற்படுத்தியுள்ளதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு அதிகரித்த வண்ணமே உள்ளது.
Listen News!