• Nov 10 2024

எனக்கு மிகப்பெரிய பிரச்சனையே தீபிகா தான்-நடிகர் ஷாருக்கான்

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

பாலிவூட் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக விளங்குபவர் தான் நடிகர் ஷாருக்கான்.

இவர் நடிப்பில் வெளியாகிய பல திரைப்படங்கள் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றதை அடுத்து தற்பொழுது இளம் இயக்குநரான அட்லி இயக்கத்தில் ஜவான் என்னும் படத்தில் நடித்து வருகின்றார். இப்படத்தில் கதாநாயகியாக நயன்தாரா நடித்து வருகின்றார்.

இந்நிலையில் இவர் பேசிய விடயம் ஒள்று இணையத்தளத்தில் தீயாய் பரவி வருகின்றது.

அது என்னவென்றால் நடிகை தீபிகாவிற்கும் தனக்கும் ஒரே மாதிரி தலை முடி இருப்பது தான் தற்போது பிரச்சனையாக இருக்கிறது என்று நடிகர் ஷாருக்கான் நகைச்சுவையாக தெரிவித்துள்ளார்.

திரைத்துறைக்கு வந்து 30 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளதை அடுத்து நீண்ட இடைவெளிக்கு பின் சமூக வலைத்தளத்தில் ரசிகர்களுடன் நேரலையில் பேசி இருந்தார்.

தற்போது தான் நடித்துவரும் படத்திற்காக நீண்ட தலை முடியுடன் இருக்கும் தனது தோற்றம் மிகவும் பிடித்திருப்பதாக கூறினார் .ஆனால் படத்தில் பார்ப்பதற்கு தீபிகாவின் தலைமுடியை போலவே இருப்பதால் தனது கேரியரில் முதல்முறையாக சிகை அலங்காரம் குறித்து தனது குழுவினருடன் பேச வேண்டியிருந்தது என்றும் தெரிவித்தார்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement