• Sep 20 2024

பையன்கள் இருந்தாலும் பொண்ணு இல்லை என்பது தான் பெரிய கவலை- ஓபனாகப் பேசிய தனுஷ்

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கக்கூடியவர் தனுஷ். இவர் குறித்து ஆரம்ப காலத்தில் பல விமர்சனங்கள் இருந்தாலும், இவரது கடின உழைப்பால் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை தற்போது பிடித்துள்ளார்.

 இவர் நடிப்பில் அடுத்ததாக கேப்டன் மில்லர் திரைப்படம் திரைக்கு வரவிருக்கிறது. அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பானது ரசிகர்களிடம் அதிகமாக உள்ளது. இதனை அடுத்து தனுஷ் தன்னுடைய 50 வது படத்தை தானே இயக்கி தானே நடிக்கவுள்ளதாக கூறப்படுகின்றது.


சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் இப்படத்தில் விஷ்ணு விஷால், துஷாரா விஜயன், எஸ். ஜே. சூர்யா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள். இந்நிலையில், சில ஆண்டுகளுக்கு முன் தனுஷ் கொடுத்துள்ள பேட்டி ஒன்றில், தனக்கு மகள் இல்லையே என கூறி சுவாரஸ்யமான விஷயம் ஒன்றை பகிர்ந்துள்ளார்.


இந்த பேட்டியில், 'என மகள் இல்லையே என்ற வருத்தம் இருக்கிறது. இரு மகன்களையும் எனக்கு மிகவும் பிடிக்கும். ஆனால், ஒரு பெண் பிள்ளை இருந்தால் தான் அந்த வீடு நிறைவாக இருக்கும். அப்படி நான் என்னுடைய மகளாக பார்ப்பது லீலாவதி-யை தான். லீலாவதி என்னுடைய அண்ணன் செல்வராகவனின் மகள்.


லீலாவதிக்கு அவருடைய தாய், தந்தை, தாத்தா, பாட்டிக்கு பிறகு இந்த உலகத்திலேயே மிகவும் பிடித்தது சித்தப்பா நான் மட்டும் தான். நான் என்ன செய்தாலும் அவருக்கு மிகவும் பிடிக்கும். என்னுடைய பாடலை பார்க்காமல் சாப்பிட மாட்டார். அந்த அளவிற்கு லீலாவதி என் மீதி பாசம் வைத்துள்ளார்' என தனுஷ் பேசியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 



Advertisement

Advertisement