வெந்து தணிந்தது காடு படத்தில் நடித்த ஜாபரை தன்னுடைய விமர்சனத்தில் ப்ளூ சட்டை உருவக்கேலி செய்து இருக்கும் வீடியோ தற்போது சமூகவலைத்தளத்தில் தீயாய் பரவி வருகின்றது. சினிமா உலகில் வெளிவரும் திரைப்படங்களை கிண்டலாகவும், கேலியாகவும் விமர்சனம் செய்து வருபவர் தான் ‘ப்ளூ சட்டை மாறன்’.மேலும் இவர் பிரபலமான ஹீரோக்களான ரஜினி, கமல், விஜய், அஜித் என யாருடைய படமானாலும் பாரபட்சம் பார்க்காமல் கிண்டல் செய்து இருக்கிறார். இவருடைய விமர்சனங்களால் படத்தின் வசூல் பாதிக்கப்படுகிறது என சினிமா பட இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் புலம்பி கொட்டுகின்றனர்.
ஆனால், இவருடைய வீடியோக்களுக்கு என்று ஒரு தனி ரசிகர் கூட்டமும் இருந்து தான் வருகின்றது. இவருக்கு இதுவரை 9 லட்சத்திற்கும் மேலான சப்ஸ்கிரைபர் உள்ளார்கள். மேலும், தன்னைத்தானே விமர்சகர் என்று சொல்லிக்கொண்டு திரைப்படங்களை சகட்டுமேனிக்கு விமர்சனம் செய்து வருகிறார்.மேலும் இப் படத்தில் இருக்கும் நிறைகளை பேசுவதைவிட குறைகளை பேசுவது தான் அதிகம். இதனால் இவரை ரசிகர்கள் பலரும் திட்டித்தீர்த்து வருகின்றார்கள்.
அதிலும் அஜித்தின் வலிமை படத்தை குறித்து மட்டுமல்லாது அஜித்தின் உருவத்தை கேலி செய்து தாறுமாறாக பேசி இருந்ததால் ரசிகர்கள் முதல் பிரபலங்கள் வரை என பலரும் கொந்தளித்து ப்ளூ சட்டை மாறனை திட்டி இருந்தார்கள். இருந்தும் தனது பாணியை மாற்றாமல் இருந்து வரும் மாறன் சமீபத்தில் வெந்து தணிந்தது காடு படத்தில் நடித்துள்ள ஜாபரை உருவக் கேலி செய்து இருக்கிறார்.
அத்தோடு பாவக்கதைகள் வெப் தொடரில் நரிக்குட்டி கதாபாத்திரத்தின் மூலம் ரசிகர்களை கவர்ந்த ஜாபர் பின்னர் விக்ரம் படத்தில் ‘கட்டிங் பளையர்’ ரோலில் அசத்தி இருந்தார். இதை தொடர்ந்து வெந்து தணிந்தது காடு படத்தில் ராவுத்தர் என்ற வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து அசத்தி இருக்கிறார் ஜாபர்.மேலும் இப்படி ஒரு நிலையில் வெந்து தணிந்தது காடு படத்தின் விமர்சனத்தில் படத்தை வழக்கம் போல கழுவி ஊற்றிய மாறன், ஜாபர் குறித்து உருவக் கேலி செய்து இருக்கிறார்.
ஜாபர் குறித்து பேசி இருக்கும் அவர் ‘ஹீரோ ஒரு பெரிய டானாக மாறி வருகிறார் என்றதும் அவரை கொல்ல ஒரு பெரிய பீசை ரெடி செய்கிறார்கள். அது யார் என்றால் விக்ரம் படத்தில் குட்டியாக லில்லி புட்டு போல மினி வாட்டர் போல வருவாரே அவரை ஒரு கோடி ரூபாய் கொடுத்து ஹீரோவை கொல்ல ஏற்பாடு செய்கிறார்கள்.’ என்று படு மோசமாக ஜாபரின் உருவத்தை கேலி செய்து உள்ளார்.
Tis idiot never changes. Hw can he body shame an actor.Jaffer has given his best in this character.This idiot can’t even match 50% of his acting but degrading him.Until few people blindly supports this #bluesattai he will be continuing this stupidity🤦🏻 #VenthuThanindhathuKaadu https://t.co/CtqV1gBnOu
மேலும் இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வர ப்ளூ சட்டை மாறனுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். விக்ரம் படம் வெளியான போது roast என்ற பெயரில் ‘Plip Plip’ யூயூப் சேனல் படத்தை கேலி செய்ததோடு மட்டுமல்லாமல் கமலின் நடிப்பையும் கேலி செய்து இருக்கின்றனர்.அத்தோடு பொதுவாக இவர்கள் ரோஸ்ட்டில் இருக்கும் காமெடிகள் ஒரு சில ரசிகர்களுக்கு பிடிக்கும் தான். ஆனால், இந்த படத்தின் ரோஸ்ட் வீடியோவை கண்டு நெட்டிசன்களே இவர்களை ரோஸ்ட் செய்து வந்தனர்.
Wtf😳He body shames @JafferJiky calls him Vikram padathula varavaar la Kuttiya Lilliput Mini Quater mathri avara ready pandranunga. It's high time take legal action on Bluesattai https://t.co/iYC0SdU3Vn @menongautham @VelsFilmIntl@SilambarasanTR_ #VendhuThanindhathuKaadu #VTK pic.twitter.com/beaWUIuwD8
இதற்கு பதிலடி கொடுத்த லோகேஷ் கனகராஜ் ‘ என் படத்தில் நடித்த ஜாபர் எல்லாம் அவன் வீட்டில் அவன் ஹீரோ. அவன் என்னை நம்பி தான் என் படத்தில நடிக்க வந்தான். ஜாபரின் நடிப்பை கேலி செய்யலாம் ஆனால், அவரின் உடலை கேவலமாக பேசுவது எனக்கும் துளியும் விருப்பம் இல்லை. நாம் எதை விதைக்கிறோமே அதை தான் அறுப்போம் என்று நம்புவன் நான்’ என்று தெரிவித்து இருந்தார்.
Listen News!