• Nov 14 2024

வித்தியாசமான முறையில் பரிசோதனை செய்யப்பட்ட பிரபல காமெடி நடிகரின் உடல்

stella / 2 years ago

Advertisement

Listen News!

1980-ஆம் ஆண்டில் இருந்து நகைச்சுவை நடிகராக அறியப்பட்டவர் தான் ராஜூ ஸ்ரீவஸ்தவா.தி கிரேட் இந்தியன் லாஃப்டர் சேலஞ்ச்" என்ற ரியாலிட்ரி ஷோ மூலம் பிரபல ஸ்டான்ட்-அப் காமெடியனாக அறிமுகமாகினார்.

இதனைத் தொடர்ந்து "மைனே பியார் கியா", "பாசிகர்", "பாம்பே டூ கோவா", "ஆம்தானி அட்டானி கர்ச்சா ரூபையா" போன்ற ஹிந்தி படங்களில் துணை கதாப்பாத்திரங்களில் நடித்திருக்கின்றார்.


இந்நிலையில், கடந்த ஆகஸ்டு 10 ஆம் தேதி உடற்பயிற்சி செய்துகொண்டிருக்கும் போது , ராஜு ஸ்ரீவஸ்தவா மயக்கமடைந்ததையடுத்து அவர் டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 40 நாட்களாக அவருக்கு தீவிர சிகிச்சைகள் வழங்கப்பட்டு வந்த நிலையில், நேற்று அவர் மரணமடைந்ததாக அறிவிக்கப்பட்டது.

 இவரது மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் மற்றும் திரை பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.நேற்று மரணமடைந்த ஸ்ரீவஸ்தவாவின் உடல் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் உள்ள மெய்நிகர் உடற்கூறாய்வு ஆய்வகத்தில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டிருக்கிறது. 


இதுகுறித்து பேசிய எய்ம்ஸ் மருத்துவமனையின் தடயவியல் பிரிவின் தலைமை மருத்துவர் சுதிர் குப்தா," பொதுவாக பிரேத பரிசோதனையில் உயிரிழந்த நபரின் உடல் பிரிக்கப்பட்டு ஆய்வுகள் மேற்கொள்ளப்படும். அதன்பின்னர் உடல் தைக்கப்பட்டு உறவினர்களிடத்தில் ஒப்படைக்கப்படும். ஆனால், மெய்நிகர் உடற்கூறாவில் டிஜிட்டல் எக்ஸ்ரே மற்றும் சிடி ஸ்கேன் மூலமாகவே உடல் உறுப்புகளை நாம் தெளிவாக காண முடியும். இதற்கான நேரமும் குறைவு. இந்த முடிவுகள் ஆவணப்படுத்தப்படவும் எளிதானது. தென்கிழக்கு ஆசியாவில் இந்த வசதி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் மட்டுமே இருக்கிறது" என புதுமையான முறையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டிருக்கிறது.

Advertisement

Advertisement