• Nov 10 2024

துணிவு படம் ஓடிடி ஸ்ட்ரீமிங்கில் நம்பர் 1 ... அஜித் வாங்கிய சம்பளம் இவ்வளவு கோடிகளா?

Jo / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் அஜித்தின் துணிவு திரைப்படம் கடந்த ஜனவரி மாதம்  11-ஆந் தேதி பொங்கலைவிருந்தாக  திரையரங்குகளில் வெளியானது.இந்த படம் வெளியான அதே நாளில் விஜய் நடித்த வாரிசு படமும் வெளியாகி இருந்தது.

அஜித்தின் துணிவு படத்த்தில்  மஞ்சு வாரியர், சமுத்திரகனி, ஜான் கோக்கன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப் படத்தை H வினோத் இயக்கியுள்ளார்.திரையரங்குகளில் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்ற இந்தப் படம் தற்போது நெட்பிளிக்ஸ் தளத்திலும் வெளியாகியுள்ளது.

பாக்ஸ் ஆபிஸில் மாஸ் காட்டியதோடு ஓடிடி ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பைப் பெற்ற துணிவு படத்திற்காக அஜித் வாங்கிய சம்பளம் குறித்து தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

சிவா காம்போவில் தொடர்ந்து 4 படங்கள் நடித்த அஜித், அடுத்து அ வினோத்துடன் கூட்டணி வைத்தார். அதன்படி இந்த காம்போவில் வெளியான நேர்கொண்ட பார்வை, வலிமை படங்கள் எதிர்பார்த்த வரவேற்பைப் பெறவில்லை. 

துணிவு படமானது, வங்கிகளில் நடக்கும் பண மோசடி, பங்குச் சந்தை, மியூச்சல் ஃபண்ட், கிரடிட் கார்டு போன்றவைகளால் எளிய மக்களின் பணம் எப்படி சுரண்டப்படுகிறது என்பதை பேசியது இத்திரைப்படம். 

இந்தப் படம் உலகம் முழுவதும் 300 கோடி ரூபாய் வரை வசூலித்ததாக சொல்லப்படுகிறது. திரையரங்குகளில் வெளியான ஒரே மாதத்தில் நெட்பிளிக்ஸ் ஓடிடியிலும் ஸ்ட்ரீமிங் ஆனது துணிவு. கடந்த 8ம் தேதி நெட்பிளிக்ஸில் வெளியான துணிவு, ஓடிடி ஸ்ட்ரீமிங்கில் இந்தியளவில் நம்பர் 1 இடத்தில் உள்ளது.

அதேபோல் உலக அளவிலான பட்டியலிலும் டாப் 10ல் இடம்பிடித்தது துணிவு. பாக்ஸ் ஆபிஸ் மட்டுமின்றி ஓடிடியிலும் ஹிட்டடித்த துணிவு படம் தியேட்டர் உரிமையாளர்களுக்கும் நல்ல லாபம் கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களைத் தொடர்ந்து துணிவு படத்தையும் போனி கபூர் தான் தயாரித்துள்ளார். இந்நிலையில், இந்தப் படத்திற்காக அஜித் வாங்கிய சம்பளம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி அவருக்கு 80 முதல் 85 கோடி வரை சம்பளம் வழங்கப்பட்டதாக தெரிகிறது.

இதனையடுத்து லைகா தயாரிக்கும் ஏகே 62 படத்தில் நடிக்கவுள்ளார் அஜித். இந்தப் படத்தின் அப்டேட் விரைவில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் துணிவு வெற்றியால் ஏகே 62 படத்துக்கான சம்பளத்தை உயர்த்தியுள்ளாராம் அஜித். 

அதன்படி ஏகே 62 படத்துக்காக 110 கோடி ரூபாய் வரை சம்பளம் கொடுக்கப்பட உள்ளதாம். மொத்தமாக 220 கோடிக்கும் அதிகமான பட்ஜெட்டில் உருவாகும் ஏகே 62 படத்துக்காக அஜித் மட்டுமே 100 கோடிக்கும் மேல் சம்பளம் வாங்கப்படுவதாக வெளியான தகவல் பரவி வருகிறது.

Advertisement

Advertisement