• Sep 20 2024

போதையில் உள்ள பிரபல நடிகை... தாறுமாறாக போட்டோ எடுத்த கேமராமேன்... ஷாக்கான ரசிகர்கள்..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் பிரபல இயக்குநரான கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் கடந்த 2018-ஆம் ஆண்டு வெளியான 'காளி' என்ற படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை ஷில்பா மஞ்சுநாத்.

இதனைத் தொடர்ந்து ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கிய 'இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்' என்ற படத்தில் ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் அதிகளவில் பேமஸ் ஆனார்.


அதனையடுத்து 'பேரழகி, தேவதாஸ் பிரதர்ஸ்' போன்ற படங்களில் நடித்த இவர், தற்போது புதிய படம் ஒன்றில் நடித்துள்ளார். அதாவது நட்டி நட்ராஜ் நாயகனாக நடித்து வரும் இப்படத்தில் அவருக்கு ஜோடியாகவே ஷில்பா மஞ்சுநாத் நடித்துள்ளார்.


இந்தப் படத்தில் நடிகை ஷில்பா மஞ்சுநாத் நடிக்கும் கேரெக்டரானது போதைப் பழக்கத்துக்கு அடிமையான ஒரு பெண்ணை மையமாக கொண்டமைந்துள்ளது.

இந்தப் படத்தினுடைய ஸ்னீக் பீக்கில் நடிகை ஷில்பா மஞ்சுநாத் போதைப் பொருட்களை உட்கொள்வது போலவும், சிகரெட் பிடிக்கும் படியான காட்சிகளும் இடம்பெற்று உள்ளன. இதைப்பார்த்த ரசிகர்கள் மிகவும் ஷாக் ஆகிப் போய் இருந்தனர்.

இதனைத் தொடர்ந்து சமீபத்தில் இவர் வெளியிடி வீடியோ ஒன்று ரசிகர்களிடையே பெரியளவில் குழப்பத்தை உண்டு பண்ணியிருக்கின்றது. அதாவது ஷில்பா பாத்ரூமில் போதையில் தலைக்கால் புரியாமல் இருக்கும் வகையில் அந்த வீடியோ அமைந்துள்ளது. 


இவ்வாறாக ரசிகர்கள் பலரும் குழம்பிப் போயிருந்த நிலையில் அது ஒரு வெப் தொடருக்காக எடுக்கப்பட்ட வீடியோ என தெரிவிக்கப்படுகின்றது. ஏற்கெனவே க்ளாமரில் பட்டையை கிளப்பும் நடிகை ஷில்பா தற்போது புகைப்படங்கள், வீடியோக்கள் என எதை பதிவிட்டாலும், அதனைப் பார்க்கும் ரசிகர்கள் "போதையில் இருப்பதுபோல் இருக்கே" என்று கலாய்த்து வருகின்றனர்.

Advertisement

Advertisement