• Sep 20 2024

ஷூட்டிங் ஸ்பொட்டில் ஆற்றில் விழுந்த கார்- சமந்தா, விஜய் தேவரகொண்டா காயம்-நடந்தது என்ன..?

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தெலுங்கு சினிமாவில் பல இளம் ரசிகர்களைக் கவர்ந்த முன்னணி நடிகராக வலம் வருபவர் தான் விஜய்தேவர்கொண்டா. இவர் தற்பொழுது நடிகை சமந்தாவுடன் இணைந்து குஷி என்னும் திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இப்படத்தின் பெஸ்ட் லுக் போஸ்டர் அண்மையில் வெளியானது.

அத்தோடு இப் போஸ்டர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்தது. தெலுங்கு, தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம்போன்ற மொழிகளில் இந்தத் திரைப்படம் டிசம்பர் மாதம் 23ஆம் தேதியன்று உலகம் முழுதும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இத் திரைப்படத்தின் ஷூட்டிங் காஷ்மீரில் நடந்தது. ஆக்ஷன் காட்சி ஒன்றை படமாக்கியிருக்கிறார்கள். அப்பொழுது விஜய் தேவரகொண்டா, சமந்தா சென்ற கார் ஆற்றில் விழுந்துவிட்டது. இதில் சமந்தா, விஜய் தேவரகொண்டா காயம் அடைந்தார்கள்.

இது குறித்து படக்குழுவை சேர்ந்த ஒருவர் கூறியதாவது,

காயம் அடைந்ததும் இருவருக்கும் முதலுதவி கொடுக்கப்பட்டது. ஞாயிற்றுக்கிழமை படப்பிடிப்பின்போது இருவருமே முதுகு பகுதி வலிப்பதாக தெரிவித்தனர். உடனே அருகில் உள்ள ஹோட்டலில் அவர்களை தங்க வைத்து பிசியோதெரபிஸ்ட்டை வரவழைத்தோம். இருவருக்கும் பிசியோதெரபி போய்க் கொண்டிருக்கிறது.

மேலும் அவர்கள் இருவருக்கும் அருகில் செல்ல யாருக்கும் அனுமதி இல்லை என்றார்.காஷ்மீரில் படப்பிடிப்பை முடித்துக் கொண்டு திங்கட்கிழமை மதியம் படக்குழு ஹைதராபாத் கிளம்பி வந்தது என குறிப்பிடப்படுகின்றது.

Advertisement

Advertisement