• Nov 10 2024

பார்த்திபன் மீது தொடரப்பட்ட வழக்கு; உடன் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு

Prema / 2 years ago

Advertisement

Listen News!

வித்தியாசமான கதைக்களங்களோடு இணைந்த வகையில் திரைப்படங்களை உருவாக்குவதில் வல்லவர் இயக்குநர் பார்த்திபன். இவர் இயக்குநர் என்பத்தைத் தாண்டி நடிகராகவே பலருக்குத் தெரியும். இவரின் நகைச்சுவை கலந்த நடிப்பை ரசிப்பதற்கு என்றே அதிகளவான ரசிகர் கூட்டம் இவரிற்கு உண்டு.

சமீபத்தில் இவர் உருவாக்கிய 'ஒத்த செருப்பு' என்ற படம் ஒரே ஒரு நடிகரை மட்டுமே வைத்து எடுக்கப்பட்ட வித்தியாசமான முயற்சியாக அமைந்திருந்தது. அத்தோடு இப்படம் இவரிற்கு அதிகளவான பாராட்டையும் பெற்றுக் கொடுத்திருந்தது.

இதனைத் தொடர்ந்து இவர் தற்போது 'இரவின் நிழல்' என்ற திரைப்படத்தை எடுத்துள்ளார். இந்த படத்தினுடைய அனைத்துக் காடசிகளும் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த படத்துக்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.அதுமட்டுமல்லாது ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்டுள்ள முதல் நான் லீனியர் திரைப்படம் என்றும் அதிசயமான முறையில் விளம்பரப்படுத்தப்பட்டு வருகிறது.

'இரவின் நிழல்' என்ற இந்தப்படம் ஆனது பலமுறை ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு சில தவிர்க்க முடியாத காரணங்களினால் பின்னர் தள்ளி வைக்கப்பட்டது. இவ்வாறாக பல தடைகளுக்குப் பிறகு ஒருவழியாக ஜூலை 15-ஆம் திகதி இப்படம் ரிலீஸ் ஆகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இப்போது இந்த படத்தை தடை செய்ய வேண்டும் எனக் கோரி நீதிமன்றத்தில் பார்த்திபன் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. அதாவது 'இரவின் நிழல்' படத்தின் படப்பிடிப்புக்காக நவின் எண்டர்பிரைசஸ் நிறுவனத்திடம் ஒளிப்பதிவு சாதனங்கள் வாடகைக்கு எடுத்த வகையில் அப்பணத்தை திரும்ப செலுத்தாமல் அவர்களுக்கு சுமார் 25 லட்சம் ரூபாய் பாக்கி வைத்துள்ளதாகவும், அதை தராமல் படத்தை ரிலீஸ் செய்யும் வேலைகளில் படத்தின் இயக்குநரான பார்த்திபன் இறங்கியுள்ளதால் படத்தை தடை செய்ய வேண்டும் என்று பாஸ்கர ராவ் என்பவர் நீதிமன்றில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.

இதனால் இது சம்மந்தமாக உடனடியாக பதிலளிக்குமாறு கூறி நீதிமன்றம் பார்த்திபனுக்கு நோட்டீஸ் ஒன்றினை அனுப்பியுள்ளது. இதனைக் கேள்விப்பட்ட ரசிகர்கள் அடடே நம்ம பார்த்திபன் பணத்தை செலுத்தவில்லை எனக் கூறுவது எமக்கு அதிசயமாக இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளனர்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement