கார்த்தி நடிப்பில் பொன்னியின் செல்வன், சர்தார் படங்கள் அடுத்தடுத்து வெளியாகவுள்ளன.சர்தார் திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகவுள்ள நிலையில் முக்கியமான அப்டேட் கிடைத்துள்ளது.
கார்த்தி, அதிதி ஷங்கர் நடிப்பில் சமீபத்தில் வெளியான 'விருமன்' திரைப்படம் ரசிகர் மத்தியில் சூப்பர் ஹிட்டடித்தது. இதனைத் தொடர்ந்து கார்த்திக்கு 'பொன்னியின் செல்வன்', 'சர்தார்' ஆகிய படங்கள் அடுத்தடுத்து வெளியாகவுள்ளன. மணிரத்னம் இயக்கியுள்ள 'பொன்னியின் செல்வன்' படத்தில் கார்த்தி வந்தியத் தேவன் கேரக்டரில் நடித்துள்ளார்.
சூப்பர் ஸ்டார் ரஜினி, உலக நாயகன் கமல் என பலரும் நடிக்க ஆசைப்பட்ட கேரக்டரில் கார்த்தி நடித்திருப்பது, அதிகம் எதிர்பார்க்க வைத்துள்ளது என்று தான் கூற வேண்டும். மல்டி ஸ்டார்ஸ் திரைப்படமான பொன்னியின் செல்வன் வரும் 30ம் தேதி வெளியாகிறது.
பொன்னியின் செல்வனைத் தொடர்ந்து கார்த்தியின் சர்தார் திரையரங்குகளில் வெளியாகிறது. பிஎஸ் மித்ரன் இயக்கியுள்ள இந்தப் படத்தில் கார்த்தி இரட்டை வேடங்களில் நடித்துள்ளார். அத்தோடு சிறுத்தை, தீரன் அதிகாரம் படங்களுக்குப் பின்னர் கார்த்தி இதில் போலீஸ் ஆபிஸராக கலக்கியுள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல், இன்னொரு கேரக்டரில் வயதான தோற்றத்தில் நடித்துள்ளார். கார்த்தியுடன் ராஷி கண்ணா, ரஜிஷா விஜயன், லைலா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.
சர்தார் திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகுமென படக்குழு ஏற்கனவே அறிவித்துவிட்டது. இதனால், அடுத்தடுத்து படம் பற்றிய அப்டேட்கள் வெளியாகும் என ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
இவ்வாறுஇருக்கையில், சர்தார் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள், டீசர் விரைவில் வெளியாகுமென சமீபத்தில் படக்குழு தெரிவித்திருந்தது. ஆக்சன் ஜானரில் உருவாகியுள்ள சர்தார் படத்துக்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். ஜார்ஜ் சி வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இந்நிலையில், சர்தார் படத்திலிருந்து மேலும் ஒரு அப்டேட் வெளியாகியுள்ளது. ஒளிப்பதிவாளர் ஜார்ஜ் சி வில்லியம்ஸ் இதுகுறித்து ட்வீட் செய்துள்ளார்.மேலும் அதில், சர்தார் படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் மிக வேகமாக நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ளார். இதனால், சர்தார் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள், டீசரைத் தொடர்ந்து ட்ரெய்லரும் விரைவில் வெளியாகுமென எதிர்பார்க்கப்படுகிறது. விருமன், பொன்னியின் செல்வன், சர்தார் என அடுத்தடுத்து கார்த்தியின் படங்கள் வெளியாவது, அவரது ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளது.
Listen News!