விஜய் டிவியில் ஹிட்டாக ஓடிக்கொண்டு இருக்கும் சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ்.
இந்த சீரியல் அண்ணன் தம்பிகளை மையமாக வைத்து எடுக்கப்பட்ட தொடர்.முழுக்க முழுக்க தமிழிலேயே உருவாக்கப்பட்டு எடுக்கப்படும் இந்த தொடர் பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு ஒளிபரப்பாகி வருகின்றது.
இவர்களின் கூட்டு குடும்பத்தை போலவே கிராமபுறங்களில் இப்போதும் பலர் வாழ்ந்து வருகிறார்கள்.
வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் இந்த தொடரில் இப்போது ஒரு தம்பி பிரிந்து தனியாக வாழும் டிராக் போல காட்சிகள் அமைக்கப்படுகின்றது.
எனினும் இந்த நேரத்தில் பாண்டியன் ஸ்டோர்ஸ் படப்பிடிப்பு தளத்தில் இருந்து ஒரு புகைப்படம் வெளியாகியுள்ளது. அதாவது தனம் மற்றும் இறந்தவர் போல் காட்டப்படும் லட்சுமி அம்மா இருவரும் படப்பிடிப்பு தளத்தில் போஸ் கொடுத்துள்ளனர்.
புதிய புகைப்படம் வைத்து பார்க்கையில் லட்சுமி அம்மாள் யாருடைய கனவிலாவது வந்து பேசுவது போல் காட்சிகள் இருக்குமோ என ரசிகர்கள் கூறுகிறார்கள்.
Listen News!