• Nov 14 2024

ஜோதிடத்திற்கு எதிராகப் பேசியதால் மாரிமுத்துவுக்கு எதிராக வழக்குத் தொடுத்த பிரபலம்- இந்த வாயை சும்மா வைச்சிருக்கமாட்டீங்களா?

stella / 1 year ago

Advertisement

Listen News!

கண்ணும் கண்ணும், புலிவால் ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் தான் மாரிமுத்து. இதனை அடுத்து யுத்தம் செய் என்னும் திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகினார்.முதல் படத்திலேயே தனது எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்திய மாரிமுத்துவுக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் குவிந்தன. 

பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்தத இவர் சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் சீரியலிலும் குணசேகரன் என்னும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருகின்றார்.எப்போதும் திமிராகவும் இருக்கும்படி வடிவமைக்கப்பட்டிருந்த அந்த கேரக்டரை மாரிமுத்து தனது நடிப்பின் மூலம் உச்சக்கட்டத்துக்கு எடுத்து சென்றுவிட்டார்.


இந்த நிலையில் அண்மையில் பிரபல தொலைக்காட்சி நடந்தும் விவாத ஷோ ஒன்றில் பங்குபற்றி இருந்தார். அது ஜோதிடர்கள் vs ஜோதிடத்தை நம்பாதவர்கள் என்ற தலைப்பில் நடந்தது. அப்போது பேசிய மாரிமுத்து, "இந்தியாவை பின்னோக்கி இழுப்பதே இந்த ஜோதிடக்காரர்கள்தான். தமிழ்நாட்டின் தற்போதைய முதலமைச்சர் முதல்வராக முடியாது என இந்தியாவில் உள்ள ஜோசியக்காரனும் சொன்னான். ஆனால் அவர் முதலமைச்சராகிவிட்டார். 

இப்போது முகத்தை தூக்கி எங்கே வைத்துக்கொள்வீர்கள்" என பல விஷயங்களை ஜோதிடத்திற்கு எதிராக அதிரடியாக பேசினார். இந்நிலையில் ஜோதிடத்திற்கு எதிராக பேசியதால் மாரிமுத்துவுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டிருக்கிறது. பழ.ஆறுமுகம் என்பவர் அனுப்பியிருக்கும் அந்த நோட்டீஸில், "கடந்த 23ஆம் தேதி அன்று பிரபல ஜி தமிழ் தொலைக்காட்சியில் தமிழா தமிழா நிகழ்ச்சியில் ஜோதிடம் பற்றிய கருத்து நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு தமிழகத்தில் உள்ள ஜோதிடர்கள், நடிகர் மாரிமுத்து, நடிகைகள் அர்ச்சனா மற்றும் நளினி மற்றும் ஜோதிடம் எதிர் கருத்து உடையவர்கள் மற்றும் பார்வையாளர்கள் கொண்டு நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டது.

மாரிமுத்து ஜோதிடர்கள் அனைவரும் மன்னிக்க முடியாத குற்றவாளி என்றும் ஜோதிடர்கள் தான் இந்தியாவை பின்னோக்கி இழுத்து செல்வதற்கு முக்கியாமான காரணம் என்றும் உன்மைக்கு புறம்பாக பொய்யான குற்றசாட்டுகளை ஆதாரம் இன்றி பேசியதை தொலைகாட்சி நிகழ்ச்சியை பார்த்து அதிர்ந்து போனேன்.

மாரிமுத்து, ஜோதிடத்தை பற்றி பொய்யான குற்றசாட்டுகளை ஆதாரமின்றி பேசியதால் மனம் புண்பட்டுள்ளது. இதனால் மாரிமுத்துவின் அவதூறு பேச்சு காலம் காலமாக பின்பற்றி வரும் ஜோதிட ஆராய்ச்சிகள் மற்றும் ஜோதிட நம்பிக்கைக்கு எதிராகவும் ஜோதிடர்கள் இந்தநாட்டின் வாழ தகுதியற்றவர்கள் என்பது போல் தீய எண்ணத்திலும் அவதூறு பரப்பி பேசியது மக்கள் மத்தியில் ஜோதிடர்கள் மற்றும் ஜோதிடத்தின் மேல் உள்ள நம்பிக்கை தீர்த்து போகும் அளவுக்கு இருக்கிறது.


இந்த நோட்டிஸ் கண்ட 15 தினங்களுக்குள் ஜி தமிழ் தனியார் தொலைக்காட்சியில் அவதூறு பேசியது குறித்து மாரிமுத்து உரிய விளக்கம் அளிக்க வேண்டும். தவறும் பட்சத்தில் அவர்மீது சிவில் மற்றும் கிரிமினல் வழக்கு தொடரப்படும்" என குறிப்பிடப்பட்டுள்ளது.


Advertisement

Advertisement