தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர நடிகைகளாக வலம் வருபவர்கள் நயன்தாரா மற்றும் திரிஷா. இவர்கள் இருவரும் திரையுலகில் கிட்டத்தட்ட 18 வருடத்திற்கும் மேலாக முன்னணியில் இருப்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமன்றி இவர்கள் இருவருக்கும் ஏராளமான ரசிகர் கூட்டம் உண்டு. மற்ற நடிகைகளை போன்று இவர்கள் இருவரும் பட வாய்ப்புக்களை தேடிப் போக வேண்டிய அவசியம் இல்லை. ஏனெனில் இவர்களுடன் நடிப்பதற்கென பலரும் போட்டி போட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.
தற்போது கூட இவர்கள் இருவரினதும் கைவசம் மூன்று படங்களுக்கும் மேல் இருக்கிறது. அந்த அளவிற்கு வளர்ந்து வருகின்றார்கள். பெண்களை பொறுத்த வரைக்கும் அழகு என்பது குறிப்பிட்ட வயது வரைக்கும் மட்டும் தான். ஆனால் இவர்கள் இருவருக்கும் அது கிடையாது. 35 வயதினை தாண்டியும் இவர்கள் இருவரும் கொள்ளை அழகில் ரசிகர்களை கொள்ளை கொண்டு வருகின்றார்கள்.
முன்னர் ஒரு நிகழ்வில் வைத்து நயன்தாராவிடம் திரிஷாவுடனான நட்பு குறித்து கேட்கப்பட்டிருந்தது. அதற்கு நயன்தாரா பதிலளிக்கையில் "அவர் என்னுடைய தோழி கிடையாது" என்று பல வருடங்களுக்கு முன் அந்நிகழ்வில் கூறியிருந்தார். ஆனாலும் அதன்பின்னர் இவர்கள் இருவரும் நெருங்கிய நண்பர்களாக மாறிவிட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தற்போது நயன்தாரா - திரிஷா இருவரும் ஒன்றாக பார்ட்டியில் எடுத்துக்கொண்ட ஒரு புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அதில் இவர்கள் இருவரும் கவர்ச்சி உடையணிந்து இருக்கின்றார். அதுமட்டுமன்றி அப்புகைப்படத்தில் திரிஷா நயன்தாராவின் கன்னத்தில் முத்தமிடுகின்றார். இதனைப் பார்த்த ரசிகர்கள் பலரும் இந்தளவிற்கு நல்ல நண்பர்களாக இருந்திருக்கின்றார்களா என ஆச்சரியப்பட்டு வருகின்றனர்.
பிற செய்திகள்
- ஆல்யா மானசா- சஞ்சீவ் ஜோடி மீண்டும் இணைவார்களா..? சோகத்தில் ரசிகர்கள்..!
- சேலையிலும் ஒரு கவர்ச்சியா..? ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் தமன்னா… அட்டகாசமான புகைப்படங்கள்..!
- பச்சை உடையில் பளிச்சென மின்னும் அஜித்தின் மச்சினி….வைரலாகும் வீடியோ பதிவு…!
- ‘தி லெஜண்ட்’ இறுதி வசூல் இவ்வளவா..? விமர்சனத்தை கண்டு துவண்டு விடாதீர்கள்… வாழ்த்தும் ரசிகர் கூட்டம்..!
- நடிகைகளிற்கு போட்டியாக போட்டோ ஷூட் நடத்தும் அனிகா… ஹீரோயின் ஆகணும் என்ற ஆசையா..? கேள்வி கேட்டு வரும் ரசிகர்கள்..!
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!