• Nov 19 2024

ரஜினியின் வார்த்தையை நம்பி மாதக்கணக்காக காத்திருந்த பிரபலம்...இறுதியில் என்னதான் நடந்திச்சு...

ammu / 1 year ago

Advertisement

Listen News!

இந்திய சினிமாவையே கலக்கி கொண்டிருக்கும் சூப்பர் ஸ்டார் என்ற பெயர் வாங்கிய ரஜினி காந்த் மிகவும் பிரபலமானவர். இவர் சாதாரண இடத்தில் இருந்து தான் சினிமாவிற்குள் நுழைந்தார். இருந்தும் இவரது நடிப்பு திறமையால் எங்கேயோ போய் விட்டார்.


இவரின் கெரியரில் செகண்ட் இன்னிங்க்ஸாக அமைந்த படம் ‘தளபதி’. இந்தப் படத்தில் ஒரு சண்டைக் காட்சியில் ரஜினிக்கு நிகரான அமைப்புடன் இருக்கிற நபர் வேண்டும் என சூப்பர் சுப்பராயனிடம் மணிரத்தினம் சொல்ல தன்னிடம் இருந்த உதவி மாஸ்டரான தினேஷ் என்பவரை அனுப்பி வைத்திருக்கிறார் சூப்பர் சுப்பராயன்.


அந்தப் படத்தில் நடித்ததன் மூலம் தினேஷ் மிகவும் பிரபலமானார். தொடர்ந்து பல படங்களில் வாய்ப்பு வர மாஸ்டராகவும் ஆனார். ஒரு சமயம் ஒரு படத்தின் படப்பிடிப்பிற்காக வெளியூர் சென்ற நிலையில் அங்கு ரஜினியும் தங்கியிருந்தாராம். 


தினேஷ் வெளியே பால்கனியில் உடற்பயிற்சி செய்து கொண்டிருக்க அதை பார்த்த ரஜினி ‘ஹாய் தளபதி’ என்று அழைத்தாராம். இதை சற்றும் எதிர்பாராத தினேஷ் ‘என்னை போய் தளபதினு கூப்பிடுகிறீர்களே’என்று சொல்லியிருக்கிறார்.


அதற்கு ரஜினி ‘தளபதி படத்தில் உங்களை சாவடித்து உங்கள் இடத்தையே அடைஞ்சு நான் தளபதி ஆனேன். அப்போ நீங்கள் தான் தளபதி’ என்று அந்தப் படத்தின் காட்சியை நியாபகப்படுத்தி கூறினாராம். அவர் என்ன நேரத்தில் சொன்னாரோ அது முதலே அவரின் பெயருக்கு முன்னால் இன்று வரை அடைமொழியாக தளபதி தினேஷ் என்றே வழங்கப்படுகிறது.


சந்திரமுகி படத்தில் தினேஷ் தான் மாஸ்டராம். அந்தப் படத்தின் தெலுங்கிலும் இவர் தான் மாஸ்டராக இருந்திருக்கிறார். தெலுங்கில் சண்டைக் காட்சிகள் எல்லாம் அற்புதமாக பண்ணியிருந்ததால் தமிழிலும் இவரையே அணுகினாராம் வாசு. இது ரஜினிக்கு தெரியவர தினேஷை ‘என்னை வந்து பார்க்க சொல்லுங்கள்’ என்று சொல்லிவிட்டாராம். உடனே தினேஷ், வாசு உட்பட அனைவரும் ரஜினியை பார்க்க சென்றிருக்கிறார்கள்.


தினேஷை பார்த்ததும் ‘ஏன் நீ மாஸ்டர் ஆனதை என்னிடம் சொல்லவில்லை’ என்று செல்லமாக கோபித்துக் கொண்டாராம். மேலும் தெலுங்கில் சண்டை காட்சிகள் எல்லாம் பார்த்தேன். அதில் ஒரு சீனை மட்டும் முக்கியமாக குறிப்பிட்டு அதை மட்டும் என்னை வைத்து நீ செய்தால் படம் முடிந்ததும் என் சார்பாக 25000 ரூபாய் தருகிறேன் என்று ரஜினி தினேஷிடம் கூறினாராம்.


அதற்காக ஒரு வார காலம் உழைத்து ரஜினிக்கு ஏற்ப அதை விட சிறப்பாக செய்து முடித்திருக்கிறார். ஆனால் படம் வெளியாகி 100 நாள், 150 நாள், வெற்றிவிழா என ஒவ்வொரு விழாக்களின் போதும் ரஜினியை சந்தித்தும் ரஜினி ஒன்றுமே சொல்லவில்லையாம். 


சரி அவர் சொன்னதை மறந்திருப்பார் என்று இருந்து விட்டாராம். தானாக போய் கேட்டால் நன்றாக இருக்காது என்று தினேஷும் அப்படியே விட்டுவிட்டாராம். மாதங்கள் பல கடக்க ஆறு மாதங்கள் கழித்து ராகவேந்திரா மண்டபத்தில் இருந்து போன் வந்ததாம்ரஜினி உங்களை வரச் சொல்லியிருக்கிறார் என்று சொன்னதும் தினேஷ் விரைவாக அங்கு சென்றாராம்.


அங்கு தினேஷை ரஜினி பார்த்ததும் திடீரென ஒரு பாக்ஸை எடுத்து அதிலிருந்து 7 சவரன் பிரேஸ் லெட்டை தினேஷ் கையில் போட்டாராம். தினேஷுக்கு மிகப்பெரிய ஆச்சரியமாகிவிட்டதாம். அப்போது அதன் மதிப்பு 65000 ரூபாய். அந்த சந்தோஷத்தில் இருந்து இன்று வரை நான் மீளவில்லை என்று கூறி மகிழ்ந்தாராம் தினேஷ். இந்த செய்தியை பிரபல பத்திரிக்கையாளர் செய்யாறு பாலு கூறினார்.


Advertisement

Advertisement