தற்போது பிரபல சினிமா விமர்சகராக வலம் வந்து கொண்டிருப்பவர் ப்ளூ சட்டை மாறன். ஒரு படம் புதிதாக ரிலீஸ் ஆகிலும் சரி, ஒரு புது பிரச்சினை உருவாகிலும் சரி அந்த இடத்தில் ப்ளூ சட்டை மாறனின் கருத்தினை எதிர்பார்த்துக் காத்திருப்போர் ஏராளம்.
மேலும் இவர் எதற்கும் துணிந்தவர். எந்த உயர்ந்த இடத்தில் இருப்பவர்களையும் கூச்ச சுபாவமோ, பயமோ இன்றி தைரியமாக விமர்சித்துப் பேசக் கூடியவர். அந்தவகையில் தற்போது கைது செய்யப்பட்ட சவுக்கு சங்கருக்கு ஆதரவு தெரிவித்து பேசியிருக்கின்றார்.
அதாவது நீதிமன்ற அவமதிதத்தார் என்ற குற்றச்சாட்டு வழக்கில் பிரபல பத்திரிகையாளரும், அரசியல் விமர்சகருமான சவுக்கு சங்கருக்கு 6 மாதம் சிறை தண்டனை விதித்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நேற்று உத்தரவிட்டு இருந்தது.
இதன் பின்னணி என்னெவெனில் கடந்த ஜூலை 22-ஆம் திகதி தனியார் யூடியூப் சேனல் ஒன்றிற்கு அளித்த பேட்டி ஒன்றில் நீதித்துறை ஊழல் நிறைந்து உள்ளதாக ஆவேசத்துடன் பேசி இருந்தார் சவுக்கு சங்கர். இதனைத் தொடர்ந்து உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தாமாக முன் வந்து அவர் மீது குற்றச்சாட்டு வழக்குப் பதிவு செய்தது.
அதுமட்டுமல்லாது இதுகுறித்து நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் எனவும் சவுக்கு சங்கருக்கு உத்தரவிடப்பட்டு இருந்தது. அந்தவகையில் கடந்த வாரம் நேரில் ஆஜரான சவுக்கு சங்கர் தனக்கு வீடியோ ஆதாரங்களை தருமாறு கேட்டிருந்தார்.
இதற்கு சம்மதம் தெரிவித்த நீதிமன்றம் வழக்கை ஒரு வாரத்திற்கு ஒத்திவைத்து இருந்தது. பின்னர் நேற்றைய தினம் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிமன்றில் ஆஜராக வந்த சவுக்கு சங்கருக்கு ஆறு மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து அங்கிருந்த போலீஸார் உடனடியாக சவுக்கு சங்கரை சுற்றிவளைத்து கைது செய்தனர். எனினும் இவரின் கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து சமூக வலைதளங்களில் பலரும் குரல் கொடுத்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது விமர்சகர் ப்ளூ சட்டை மாறனும் சவுக்கு சங்கருக்கு ஆதரவாக குரல் கொடுத்து பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதாவது, சவுக்கு சங்கரை சிங்கம் மாதிரி வாழ்பவர் என்றும், எதையும் ஆராய்ந்து பேசுபவர், உண்மையின் பக்கம் நிற்பவர் என்றும் புகழ்ந்து பேசியுள்ள ப்ளூ சட்டை மாறன், அவர் மீதான கைது நடவடிக்கை அதிர்ச்சியை தருவதாக கூறியுள்ளார்.
அதுமட்டுமல்லாது தான் சவுக்கு சங்கரின் பக்கம் நிற்பதாகவும், அவருக்கு தான் முழு ஆதரவு தெரிவிப்பதாகவும் அந்த வீடியோவில் ப்ளூ சட்டை மாறன் தெரிவித்திருக்கின்றார்.
#WeSupportSavukkuShankar#WeStandWithSavukkuShankar#ISupportSavukkuShankar pic.twitter.com/dFM8rcAYCk
Listen News!