பிரபு தேவா நடன இயக்குநராக அறிமுகமாகி, நடிகர் மற்றும் இயக்குநர் என பல திறனை வெளிப்படுத்தியவர். இவரது நடிப்பில் அடுத்ததாக பஹிரா திரைப்படம் வெளியாக உள்ளது.
திரையில் த்ரிஷா இல்லன்னா நயன்தாரா, AAA உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் தான் பஹிரா படத்தையும் இயக்கி உள்ளார். இந்த திரைப்படம் மார்ச் 03 ஆம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரபூர்வ அறிவிப்பு சில நாட்களுக்கு முன் வெளியாகின.
இந்த படத்தில் பிரபு தேவாவுடன் அமைரா தஸ்தூர், ரம்யா நம்பீசன், ஜனனி ஐயர், நாசர், சஞ்சிதா ஷெட்டி, காயத்ரி சங்கர், சாக்ஷி அகர்வால், சோனியா அகர்வால் உள்ளிட்ட பலரும் இணைந்து நடித்துள்ளனர். இந்த படத்திற்கு கணேசன் எஸ் இசையமைத்துள்ளார். மேலும் பஹிரா படத்தின் புது டிரெய்லர் நேற்று முன்தினம் வெளியானது.
இந்நிலையில் இந்த படம் இந்திய அரசின் சென்சார் போர்டு மூலம் 'ஏ' சான்றிதழ் வழங்கியுள்ளது. 2 மணி நேரம் 26 நிமிடங்கள் 41 வினாடிகள் ஓடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே பிரபு தேவாவின் ரசிகர்களுக்கு ஒரே குதூகலமாக இருக்க போகிறது.
Listen News!