• Nov 10 2024

பாபா' ரீ- ரிலீஸ் படத்தின் புதிய கிளைமேக்ஸ் காட்சி நடந்த மாற்றம்..அடடே சற்றுத் எதிர்பாராத திருப்பம்

stella / 1 year ago

Advertisement

Listen News!

சூப்பர் ஸ்டார் ரஜனிகாந்த் நடிப்பில்  கடந்த 2002 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் 'பாபா'. இந்த  படத்திற்கு கதை, திரைக்கதை எழுதியதுடன் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் இப்படத்தை தயாரித்தும் இருந்தார். 

இந்த படத்தை இயக்கினார். ரஜினிகாந்தின் மனதுக்கு மிகவும் நெருக்கமான இந்த படம், மிக பிரமாண்டமாக வெளியான நிலையில், கலவையான விமர்சனங்களை பெற்று படு தோல்வியை சந்தித்தது.இப்படத்தில் கதாநாயகியாக மனிஷா கொய்ராலா நடித்திருந்தார். 


மேலும் முக்கிய வேடங்களில்  கவுண்டமணி, டெல்லி கணேஷ், சுஜாதா, எம்.என்.நம்பியார் ஆஷிஷ் வித்யார்த்தி, சாயாஜி ஷிண்டே, சங்கவி, கருணாஸ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் இந்த படத்தில் இடம்பெற்ற பாடல்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

ரஜினிகாந்த் தான் தெய்வமாக வழிபடும், பாபாஜியின் மகிமைகளை எடுத்து கூறும் விதமாக இந்த படத்தின் திரைக்கதையை எழுதி இருந்தார். அதே நேரம்... முழு தெய்வீக படமாக மட்டுமே இல்லாமல், காதல் ஆக்ஷன், அரசியல், செண்டிமெண்ட், காமெடி என அனைத்து அம்சங்களும் நிறைந்த படமாக இது இருந்தது. 


இந்த படத்தில் ரஜினி காட்டிய அந்த பாபா முத்திரை, படம் வெளியான சமயத்தில் குழந்தைகளை பெரிதும் கவர்ந்தது.இப்படம் வெளியாகி 20 வருடங்கள் ஆகும் நிலையில், படத்தை டிஜிட்டல் முறையில் மாற்றியதோடு, கிளைமேக்ஸ் காட்சியிலும் மாற்றம் செய்யப்பட்டு இன்றைய தினம் வெளியாகியது.

அந்த வகையில் தற்போது, இந்த படம் புது பொலிவுடன் நேற்று வெளியான நிலையில்... இப்படத்தில் இடம்பெற்றுள்ள கிளைமேக்சில் ஏற்பட்டுள்ள மாற்றம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது ‘பாபா’ படத்தில், அரசியல் பாதையே சரி என்ற கிளைமேக்ஸ் இருக்கும். இன்றைக்கு தனது ரசிகர்களே அதை விரும்பமாட்டார்கள் என உணர்ந்த அவர், மீண்டும் ரிலீஸ் செய்யப்பட்டுள்ள படத்தில் கிளைமேக்ஸை மாற்றியுள்ளார். ‘நீ உன் தாயின் மனதை காயப்படுத்தி இருக்கிறாய். எனவே மீண்டும் பிறந்து தாயின் ஆசையை நிறைவேற்று. நேரம் வரும்போது உன்னை அழைக்கிறேன்’ என பாபா கூறுவது போல் இறுதிகாட்சி மாற்றப்பட்டுள்ளதாம்.


Advertisement

Advertisement