மலையாள சினிமா படங்களில் மற்றும் சின்னத்திரை தொடர்களில் நடித்து பிரபலமானவர் நடிகை லின்டு ரோனில (Lintu Rony). மருத்துவமனைக்கு சென்று பிரசவம் பார்த்துக் கொண்ட வீடியோவையே இவர் தனது யூடியூப் சேனலில் வெளியிட்டு லைக்குகளையும் லட்சக் கணக்கில் வியூஸ்களையும் அள்ளி வருகிறார்.
சினிமா பிரபலங்கள் ஹோம் டூர் முதல் பாத்ரூம் டூர் வரை என தங்களது தனிப்பட்ட வாழ்க்கை விஷயங்களை வீடியோக்களாக பதிவிட்டு யூடியூபில் வருமானத்தை பெருமளவில் ஈட்டி வருகின்றனர்.
பிரபல மலையாள நடிகையான லின்டு ரோனி திருமணம் செய்து கொண்டு அமெரிக்காவில் செட்டிலான நிலையில், தொடர்ந்து தான் கர்ப்பமாக இருந்தது முதல் குழந்தை பிறந்தது வரை அனைத்தையும் வீடியோவாக பதிவிட்டு பாசிட்டிவ் பிரெக்னன்ஸி விஷயத்தை செய்துள்ளார்.
மலையாளத்தில் 2011ம் ஆண்டு வெளியான வாடாமல்லி படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை லின்டு ரோனி. அதன் பின்னர் பல மலையாள திரைப்படங்களிலும் கன்னட படங்களிலும் நடித்து வந்த இவர், சின்னத்திரை சீரியல்களிலும் நடித்து ஏகப்பட்ட ரசிகர்களை கவர்ந்துள்ளார்.
2016ம் ஆண்டு தமிழில் அஸ்வின் காகமனு நடிப்பில் வெளியான ஜீரோ படத்தில் அம்மா ரோலில் லின்டு ரோனி நடித்திருந்தார். அதன் பின்னர், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்த மாஸ்டர் படத்தில் டீச்சர் ரோலில் நடித்திருந்தார்.
லின்டு ரோனி என தனது பெயரிலேயே யூடியூப் சேனல் ஒன்றை தொடங்கி லட்சக் கணக்கில் சப்ஸ்கிரைபர்களை வைத்திருக்கும் லின்டு திருமணம் ஆகி 9 ஆண்டுகள் கழித்து தனக்கு குழந்தை பிறந்துள்ள நிலையில், அந்த மகிழ்ச்சியான தருணங்களை அப்படியே படம் பிடித்து, குழந்தை பெற்றுக் கொள்வது ரொம்பவே சந்தோஷமான மற்றும் சுலபமான விஷயம் என்பதை பெண்களுக்கு உணர்த்த இப்படியொரு லைவ் வீடியோவை வெளியிட்டுள்ளதாக கூறியுள்ளார்.
குடும்பத்துடன் மருத்துவமனைக்கு சந்தோஷமாக செல்லும் லின்டு ரோனி அழகிய ஆண் குழந்தையை ஈன்றெடுக்கும் காட்சிகளை வீடியோவாக வெளியிட்டதை பார்த்த ரசிகர்கள், தாயும் சேயும் நலமாக இருக்க வேண்டும் என வாழ்த்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Listen News!