இந்திய சினிமாவில் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை கொண்டவர் தான் நடிகை சமந்தா.
இவர் நடிப்பில் சாகுந்தலம் படம் கடந்த வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 14ம் தேதி ரிலீஸ் ஆனது. சமந்தாவின் நடிப்புக்கு பாராட்டு கிடைத்துவந்தாலும் படத்திற்கு எதிர்பார்த்த அளவுக்கு வசூல் வரவில்லை என்று தான் கூறப்படுகிறது.
அத்தோடு சமந்தா இந்த படத்திற்க்காக மிக தீவிரமாக ப்ரோமோஷனில் ஈடுபட்டு வந்தார். ஆனால் கிடைத்திருக்கும் ரெஸ்பான்ஸ் மோசமான அளவில் தான் இருக்கிறது என்பதால் அவர் சோகத்தில் உள்ளாராம்.
இது ஒருபுறம் இருக்க சாகுந்தலம் படத்தில் சமந்தா உடன் நடித்த குழந்தை யார் என்கிற விவரம் தற்போது வெளியாகி உள்ளது. நடிகர் அல்லு அர்ஜுனின் மகள் அல்லு அர்ஹா தான் அது.
தனது செல்ல மகளின் கெஸ்ட் ரோல் பற்றி அல்லு அர்ஜுன் ட்விட்டரில் பதிவிட்டு உள்ளார்.
Listen News!