• Nov 11 2024

பல கோடி ரூபாய் கொடுத்து கார்த்தியின் படத்தை கைப்பற்றிய நிறுவனம்…அடடே அதுவும் இந்தப் படத்தையா..?

Prema / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் வாரிசு நடிகராக அறிமுகமாகி அண்ணனுக்கு அடுத்த படியாக வளர்ந்து வருகின்ற ஒரு முன்னணி ஹீரோவே நடிகர் கார்த்தி. இவருக்கு கதாநாயகன் என்ற அந்தஸ்தைக் கொடுத்தது 2007-ஆம் ஆண்டு வெளியாகிய 'பருத்தி வீரன்' என்ற திரைப்படமே. அதனைத் தொடர்ந்து 'ஆயிரத்தில் ஒருவன், சகுனி, சிறுத்தை, பிரியாணி, தோழா' எனப் பல படங்களிலும் நடித்திருக்கின்றார்.

இவ்வாறாகப் பல படங்களில் நடித்த கார்த்தி தனது திறமையினால் ரசிகர்கள் பலரின் மனங்களைக் கவர்ந்து தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தையும் உருவாக்கியுள்ளார். இவரின் படங்களிற்கென காத்திருக்கும் ரசிகர் கூட்டமோ ஏராளம்.

இந்த நிலையில் கார்த்தியின் நடிப்பில் அடுத்ததாக வெளியாகவுள்ள திரைப்படம் 'விருமன்'. இப்படத்தை முத்தையா இயக்கியிருக்கின்றார். அத்தோடு இப்படத்தினுடைய அனைத்துப் பணிகளும் முடிவுற்ற நிலையில் இப்படம் ஆகஸ்ட் 12-ஆம் திகதி வெளியாக இருக்கின்றது.

இப்படத்தினைத் தொடர்ந்து கார்த்தி இயக்குநர் மணிரத்னத்தின் பிரமாண்ட படைப்பான 'பொன்னியின் செல்வன்' என்ற திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இப்படமும் செப்டம்பர் 31-ஆம் திகதி பிரமாண்டமாக வெளியாக இருக்கின்றது.

இதனைத் தொடர்ந்து பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் தற்போது கார்த்தி நடித்து முடித்துள்ள திரைப்படம் 'சர்தார்'. இப்படமும் ஒக்டோபர் 24-ஆம் திகதி தீபாவளி தினத்தன்று வெளியாக இருக்கின்றது.

இவ்வாறாக கார்த்தியின் இந்த மூன்று படங்களும் வெளியாக தயாராக இருக்கும் நிலையில் இவரின் நடிப்பில் அடுத்ததாக உருவாகி வரும் திரைப்படம் தான் 'ஜப்பான்'. இப்படம் குறித்த அறிவிப்பு இதுவரை வெளிவரவில்லை.

எனினும் இப்படத்தை ராஜு முருகன் இயக்கி வருகிறார். அதுமட்டுமன்றி இப்படம் அடுத்த ஆண்டு தீபாவளி அல்லது 2024-ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் எனத் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

இப்படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு இதுவரை வெளிவராத நிலையில் தற்போது பிரபல முன்னணி ஓடிடி நிறுவனமான நெட்பிளிக்ஸ் ரூ. 24 கோடி கொடுத்து இப்படத்தின் டிஜிட்டல் உரிமையைக் கைப்பற்றியுள்ளதாக சமீபத்தில் தகவல் ஒன்று வெளியாகி இருக்கின்றது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement