• Sep 20 2024

அட்லீக்கும், ஷாருக்கானுக்கும் இடையில் மோதலா... எல்லாத்துக்கும் காரணம் பணம் தானாம்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமாவின் பிரபல இயக்குநர்களில் ஒருவராகத் திகழ்ந்து வருபவர் அட்லீ. இவர் சினிமாவில் நுழைந்து குறுகிய காலத்திற்குள்ளேயே வளர்ச்சியில் விண்ணைத் தொடும் அளவிற்கு உயர்ந்து நிற்கின்றார். 

அந்தவகையில் அட்லீ இயக்கத்தில் அடுத்ததாக உருவாகி வரும் திரைப்படம் ஜவான். வித்தியாசமான கதையம்சத்தைக் கொண்ட இப்படத்தில் ஹீரோவாக பாலிவுட் ஹீரோ ஷாருக்கான் நடித்து வருகிறார்.


அதுமட்டுமல்லாது நயன்தாரா கதாநாயகியாக நடித்து வரும் இப்படத்தில் வில்லனாக விஜய் சேதுபதி நடிக்கிறார். யாருமே எதிர்பார்க்காத வகையில் பிரமாண்டமாக தயாராகி வரும் இப்படத்தை ஷாருக்கானின் தயாரிப்பு நிறுவனமான Red Chillies Entertainment தான் தயாரிக்கிறது.

இந்நிலையில் படத்தின் உடைய பட்ஜெட்டை அதிகரிக்க வைக்கும் விதமாக பல செலவுகளை ஏற்படுத்துகிறாராம் இயக்குநர் அட்லீ. இதனால் ஷாருக்கான் அட்லீ மீது பயங்கர கோபத்தில் இருப்பதாக சினிமா வட்டாரங்களிலிருந்து தகவல் வெளியாகியுள்ளது.


அதுமட்டுமின்றி அட்லீயிடம் வீண் செலவை செய்யாதீர்கள் என்று கண்டித்து கூறியுள்ளாராம் ஷாருக்கான். இதனால் இருவருக்கும் இடையே சற்று மனஸ்தாபம் ஏற்பட்டுள்ளதாக அங்கிருந்தோர் தெரிவிக்கின்றனர்.

Advertisement

Advertisement