பல்லாயிரக்கணக்கான ரசிகர்களைத் தன்னகத்தே கொண்டு மிகப்பெரிய வெற்றிபெற்ற ஒரு நிகழ்ச்சி தான் 'குக்வித் கோமாளி'. இது ஒரு சமையல் நிகழ்ச்சிதான் என்றாலும் இதில் இடம் பெறும் நகைச்சுவைக்கு அளவே இல்லை.
இந்நிகழ்ச்சியானது வெற்றிகரமாக மூன்று சீசன்களை கடந்து விட்ட நிலையில், இதன் நான்காவது சீசன் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. இதில் அதிரடித் திருப்பங்கள் இடம்பெற்ற வண்ணமே இருக்கின்றன. அந்தவகையில் இதுவரை காலமும் கோமாளியாக களமிறங்கிய ஷிவானி இந்த சீசனில் குக்காக பங்கேற்றிருக்கின்றார்.
அந்தவகையில் இதில் இன்று ஒளிபரப்பான எபிசோட்டில் இம்யூனிட்டி சுற்று நடைபெற்றது. இதில் முதலில் நடந்து முடிந்த அட்வான்டேஜ் சுற்றில் காளையன் மற்றும் சிங்கப்பூர் தீபன் ஆகியோர் வெற்றி பெற்றனர். அதன் பின்னர் மெயின் சுற்றில் பங்கேற்ற 9 போட்டியாளர்களில் இருந்து சிறப்பாக சமையல் செய்த 4 போட்டியாளர்களை இரண்டாவது இம்யூனிட்டி சாலேஞ் சுற்றுக்கு நடுவர்கள் தேர்ந்தெடுத்தனர்.
இந்நிலையில், இதில் நன்றாக சமைத்து நடுவர்களிடம் சிறந்த பாராட்டுகளை பெற்ற சிவாங்கி, இந்த வாரம் இம்யூனிட்டி சுற்றில் வெற்றி பெற்றிருக்கின்றார். இதன்முலம் அடுத்த வாரம் நடைபெறவுள்ள எலிமினேஷன் சுற்றில் அவர் கலந்துகொள்ள தேவையில்லை எனக் கூறப்படுகிறது.
Listen News!