• Sep 20 2024

அடுத்த லிஸ்ட் ரெடி... பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறும் அந்த போட்டியாளர்... பிக் பாஸ் சீசன் 7...

subiththira / 11 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவி ரியாலிட்டி ஷோ பிக் பாஸ் சீசன் 7 ஆரம்பமாகி இப்போ இரண்டாவது வாரம் ஆரம்பமாகி இருக்கு. மத்த சீசன்களை விட இந்த சீசன் வித்தியாமாக இருக்கு.18 போட்டியாளர்களின் ஒருவர் வெளியாகின நிலையில்தற்போது மீதம் இருக்கும் 17 போட்டியாளர்களும் அடுத்த வாரத்திற்கான நாமினேஷன் லிஸ்ட்டை தயார் செய்தனர்.


இதில் பிக் பாஸ் மற்றும் ஸ்மால் பாஸ் போன்ற இரண்டு வீட்டில் இருக்கும் போட்டியாளர்கள் தனித்தனியாக நாமினேட் செய்யப்பட்டனர். அந்த வகையில் இந்த வாரம் நாமினேஷன் லிஸ்டில் விசித்ரா, பிரதீப், அக்ஷயா, ஜோவிகா, மாயா, விஷ்ணு, பூர்ணிமா போன்ற ஏழு போட்டியாளர்கள் நாமினேஷன் செய்யப்பட்டுள்ளார். 


நேற்றிலிருந்து பிக் பாஸ் ரசிகர்கள் இந்த ஏழு பேருக்கும் தங்கள் ஓட்டுக்களை போட துவங்கியிருக்கின்றனர்.முதல் நாளே ரசிகர்கள் அளித்த ஓட்டுக்களின் அடிப்படையில் பிரதீப் மொத்த ஓட்டுகளையும் அள்ளி முதலிடத்தில் இருக்கிறார்.


என்னதான் பிக் பாஸ் வீட்டில் சர்ச்சைக்குரிய விஷயங்களை பேசினாலும் அவர் இந்த வீட்டில் இருந்தால் நன்றாக இருக்கும் என ரசிகர்கள் விரும்பியதால் விசித்ராவிற்கு தங்களது ஆதரவை கொடுத்து ஓட்டிங் லிஸ்டில் 2வது இடத்தில் இருக்க வைத்திருக்கின்றனர்.


3-வது இடத்தில் பெரியவர்களுக்கு கொஞ்சம் கூட மரியாதை கொடுக்காத ஜோவிகாவிற்கு கிடைத்திருக்கிறது. தொடர்ச்சியாக 4-வது இடம் கேரளாவை சேர்ந்த அக்ஷயாவிற்கு கிடைத்திருக்கிறது. ஓட்டிங் லிஸ்டில் 5-வது இடத்தில் விஷ்ணு இருக்கிறார். 6-வது இடத்தில் யூடியூப்பர் பூர்ணிமா இருக்கிறார்.ஓட்டிங் லிஸ்டில் கடைசி இடத்தில் மாயா இருக்கிறார்.


இப்படி போட்டியாளர்கள் நாமினேஷன் செய்து இருந்தாலும் ரசிகர்களின் ஓட்டுகளும் கவனிக்கப்படும். அந்த வகையில் இந்த முறை எந்த போட்டியாளர் வெளியேற போகிறார் என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

  


Advertisement

Advertisement