வெற்றிமாறன் இயக்கத்தில் நகைச்சுவை நடிகர் சூரி கதாநாயகனாக நடித்துள்ள படம் 'விடுதலை'. மேலும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் விஜய் சேதுபதி நடித்துள்ளார்.
எழுத்தாளர் ஜெயமோகனின் துணைவன் என்கிற சிறுகதையை மையமாக வைத்து இப்படம் உருவாகி உள்ளது. இளையராஜா இசையமைக்கும் இப்படத்தை ஆர்.எஸ் இன்ஃபோடெயின்மென்ட் சார்பில் எல்ரெட் குமார் தயாரிக்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து தற்போது ரிலீஸிற்கு காத்திருக்கின்றது. அந்தவகையில் வருகிற 31ஆம் தேதி இப்படம் வெளியாகவுள்ளது.இந்த படத்திற்கான அனைத்து பணிகளும் முடிந்து விட்டது என்பதும், சென்சார் பணிகள் உட்பட அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இவ்வாறுஇருக்கையில் ’விடுதலை’ திரைப்படம் ரிலீஸ் ஆக இன்னும் இரண்டு நாள் மட்டுமே இருக்கும் நிலையில் திடீரென இயக்குநர் வெற்றிமாறன் இந்த படத்தில் சில மாற்றங்களை செய்துள்ளதாக சொல்லப்படுகின்றது. எனினும் குறிப்பாக இந்த படத்தில் டப்பிங்கில் அவர் சில கரெக்ஷன் செய்ததாக தெரிகிறது.
இயக்குநர் வெற்றிமாறன் தனது படத்திலுள்ள அனைத்துமே பெர்ஃபெக்ட் ஆக இருக்க வேண்டும் என்பதில் கவனமாக இருப்பார் என்பதும் அதன் காரணமாகத்தான் கடைசி நேரத்தில் கூட அவர் டப்பிங் கலைஞர்களை வரவழைத்து சில மாற்றங்களை செய்துள்ளார் என்றும் சொல்லப்படுகின்றது.
இசைஞானி இளையராஜா இசையில் உருவான இந்த படத்தில் சூரி, விஜய் சேதுபதி, கெளதம் மேனன், பவானிஸ்ரீ, பிரகாஷ்ராஜ், ராஜீவ் மேனன் உள்பட பலர் நடித்துள்ளனர். ஆர்.எஸ்.இன்போடெய்ன்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படம் வேல்ராஜ் ஒளிப்பதிவில் உருவாகியுள்ளது.
Listen News!