• Sep 20 2024

ஜெயிலர் படத்தின் முக்கிய காட்சியை நீக்க அதிரடியாக உத்தரவிட்ட நீதிமன்றம்- அதிர்ச்சியில் ரசிகர்கள்

stella / 1 year ago

Advertisement

Listen News!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குநர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் ஆகஸ்ட் 10ம் தேதி வெளியாகிய திரைப்படம் தான் ஜெயிலர்.இப்படம் வெளியாகி இதுவரை 600 கோடி வசூலை நெருங்கி  விட்டதாக கூறப்படுகின்றது. அத்தோடு இப்படத்தில்  நடிகை ரம்யா கிருஷ்ணன் ,தமன்னா, சுனில் ,யோகி பாபு, ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

அத்தோடு இவர்களுடன் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார், மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால், பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெரிப் ஆகியோர் கேமியோ ரோலில் நடித்துள்ளனர். அத்தோடு இப்படத்திற்கு அனிரூத் இசையமைத்துள்ளார்.அத்தோடு இப்படம் தாறுமாறு ஹிட் அடித்துள்ள நிலையில் ஜெயிலர்' படத்தில் இருந்து ஒரு காட்சியை நீக்க டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகின்றது.


அதாவது 'ஜெயிலர்' படத்தில், RCB அணியின் ஜெஸ்ஸி அணிந்து குணச்சித்திர நடிகர் ஒருவர் நடித்திருந்தார். சில நிமிடமே அவரின் காட்சி இடம்பெறும் நிலையில், அதில் அவர் பெண்களுக்கு எதிராக சில கருத்துக்களை பேசும் படி காட்சி எடுக்கப்பட்டிருக்கும். இதுபோல் தங்களின் ஜெர்சியை அணிந்து கொண்டு பேசுவதால் "எங்கள் அணியின் நட்பெயர் கெட்டுப்போகும் எனக் கூறி ஐபிஎல் அணியான, RCB அணியின் தரப்பில் இருந்து, டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.


இந்த வழக்கு டெல்லி உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்த நிலையில்,  இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பிரதீபா எம் சிங் செப்டம்பர் 1ஆம் தேதி முதல், RCB அணியின் ஜெஸ்ஸி அணிந்து படமாக்கப்பட்ட அந்த குறிப்பிட்ட காட்சியை நீக்க கோரி தயாரிப்பாளருக்கு உத்தரவிட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement