• Nov 17 2024

யானை படத்தின் விசாரணையை தள்ளி வைத்த நீதி மன்றம்- அட இது தான் காரணமா?

stella / 2 years ago

Advertisement

Listen News!

இயக்குநர் ஹரி இயக்கத்தில் நடிகர் அருண்விஜய் நடிப்பில் உருவாகி வெளியாகிய திரைப்படம் தான் யானை. இப்படத்திற்கு எதிராக சென்னை வில்லிவாக்கத்தை சேர்ந்த தமிழ்நாடு மீனவர் கூட்டமைப்பின் செயற்குழு உறுப்பினர் ஜோபாய் கோமஸ் என்பவர் வழக்கு தொடர்ந்தார்

அந்த மனுவில், யானை திரைப்படத்தில் ராமநாதபுரம், தங்கச்சிமடம், பாம்பன் பகுதி மீனவ சமுதாயத்தைச் சேர்ந்தவர்களை சமூக விரோதிகளாக காட்டியுள்ளதாகவும், மீனவர்களை கூலிப்படையினராகவும், குழந்தைகளை தவறாக பயன்படுத்துபவர்களாகவும் சித்தரிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

சில காட்சிகள் மத உணர்வை புண்படுத்தும் வகையில் இருப்பதாகவும், கச்சத்தீவு பிரச்னையும் இந்த படத்தில் கையாளப்பட்டுள்ளதாகவும், அந்த விதம் தங்கள் உணர்வுகளை புண்படுத்தும் வகையில் இருப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

உயிரை பணயம் வைத்து நடுக்கடலில் மீன் பிடித்து, ஆண்டுக்கு 10,000 கோடி ரூபாய் அன்னிய செலாவணி ஈட்டித்தரும் விளிம்புநிலை மக்களான மீனவர்களை அவமதிக்கும் வகையில் உள்ள காட்சிகளுடன் படத்தை தொடர்ந்து திரையிட தடை விதிக்க வேண்டும் எனவும், படத்துக்கு வழங்கப்பட்ட தணிக்கை சான்றிதழை ரத்து செய்ய வேண்டும் எனவும் மனுவில் கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்த மனு தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி மாலா அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் காணொலி காட்சி மூலம் ஆஜராவதில் இடையூறு ஏற்பட்டதால், வழக்கின் விசாரணையை ஆகஸ்ட் 1ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement