• Sep 21 2024

வீட்டில விஷேசம் திரைப்படத்தின் “பாப்பா பாட்டு“ என்னும் 2வது பாடலை வெளியிட்ட படக்குழு

stella / 2 years ago

Advertisement

Listen News!

தொகுப்பாளராக அறிமுகமாகி தீயா வேலை செய்யனும் குமாரு, வடகறி போன்ற திரைப்படங்களில் முக்கிய வேடங்களில் நடித்து சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் ஆர்.ஜே.பாலாஜி.

ஆர்.ஜே.பாலாஜி தற்போது தனக்கேற்ற கதைகளை தேர்வு செய்து நாயகனாக நடித்து வருகின்றார்.அந்த வகையில் அவர் நடித்த 'எல்.கே.ஜி', 'மூக்குத்தி அம்மன்' ஆகிய படங்கள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றன. இதையடுத்து வீட்ல விசேஷங்க" என்ற திரைப்படத்தை இயக்கி நடித்து வருகின்றார்.அந்த படத்தின் இறுதி கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.

ஹிந்தியில் வெளியாகி வெற்றியடைந்த 'Badhaai Ho' படத்தை தமிழில் வீட்ல விசேஷம் என்ற தலைப்பில் போனி கபூர் ரீமேக் செய்துள்ளார்.அந்த திரைப்படத்தை ஆர்.ஜே.பாலாஜி, Nj சரவணன் என்பவருடன் இணைத்து இயக்கி நடித்துள்ளார். இப்படத்தில் அபர்ணா பாலமுரளி, சத்யராஜ், ஊர்வசி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இந்த திரைப்படம் வரும் ஜூன்-17 அன்று வெளியாகவுள்ளது.இந்நிலையில் படத்தை பிரபலப்படுத்தும் வேளையில் ஆர்.ஜே.பாலாஜி தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.ஏற்கனவே தந்தையை மையமாக வைத்து ஒரு பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் கிரிஷ் கோபாலகிருஷ்ணன் இசையில் என்ற தலைப்பில் இரண்டாவது பாடலை வெளியிட்டுள்ளார்.இந்த பாடலை பா.விஜய் எழுதியுள்ளார். அதே போல பிரபல பாடகர் சித்.ஸ்ரீராம் பாடலை பாடியுள்ளார்.இந்த பாடலும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெறத்தொடங்கியுள்ளது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement