தொகுப்பாளராக அறிமுகமாகி தீயா வேலை செய்யனும் குமாரு, வடகறி போன்ற திரைப்படங்களில் முக்கிய வேடங்களில் நடித்து சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் ஆர்.ஜே.பாலாஜி. இது தவிர தனக்கேற்ற கதைகளை தேர்வு செய்து நாயகனாகவும் நடித்து வருகின்றார்.
அந்த வகையில் அவர் நடித்த 'எல்.கே.ஜி', 'மூக்குத்தி அம்மன்' ஆகிய படங்கள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றன. இதையடுத்து வீட்ல விசேஷங்க" என்ற திரைப்படத்தை இயக்கி நடித்து வருகின்றார்.அந்த படத்தின் இறுதி கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
அந்த திரைப்படத்தை ஆர்.ஜே.பாலாஜி, Nj சரவணன் என்பவருடன் இணைத்து இயக்கி நடித்துள்ளார். இப்படத்தில் அபர்ணா பாலமுரளி, சத்யராஜ், ஊர்வசி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இந்த திரைப்படம் வரும் ஜூன்-17 அன்று வெளியாகவுள்ளது.இந்நிலையில் படத்தை பிரபலப்படுத்தும் வேளையில் ஆர்.ஜே.பாலாஜி தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.ஏற்கனவே தந்தையை மையமாக வைத்து ஒரு பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் கிரிஷ் கோபாலகிருஷ்ணன் இசையில் பாப்பா பாட்டு என்ற தலைப்பில் இரண்டாவது பாடலை வெளியிட்டுள்ளார்.இந்த பாடலை பா.விஜய் எழுதியுள்ளார். அதே போல பிரபல பாடகர் சித்.ஸ்ரீராம் பாடலை பாடியுள்ளார்.இந்த பாடலும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெறத்தொடங்கியுள்ளது.
வீட்டில் மகன் கல்யாண வயதில் இருக்கின்றார் ஆனால் அவரின் அம்மா கர்ப்பமாக உள்ளார். இந்த பிரச்சனைகளை வைத்தவாறே கதை அமைகின்றது. படக்குழுவினர் ப்ரமோஷனுக்காக ஷு தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் தேவயானி நடிக்கும் புது புது அர்த்தங்கள் சீரியலில் நடித்து உள்ளனர். பட வெளியீட்டுக்கு முன்பு அவர்கள் நடித்த எபிசோட்கள் ஒளிபரப்பாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிற செய்திகள்:
- “எங்கேயும் எப்போதும் எதுவேண்டுமானாலும் செய்யலாம்”- படப்பிடிப்புத் தளத்திலும் முரட்டுத்தனமாக பயிற்சி செய்யும் சூரி
- இதயத்தை திருடாதே சீரியல் நடிகை ஹீமா பிந்துவின் கண்னை கவரும் அழகான போட்டோ ஷுட்
- இசைப்புயல் ஏ.ஆர் ரகுமானின் மகளது திருமண வரவேற்புப் புகைப்படங்கள்
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!