• Sep 20 2024

பிக்பாஸ் சீசன் 7 இல் களமிறங்கும் பிரபல காமெடி நடிகரின் மகள்- அடடே இவர் அந்த ஷோவிலும் வந்தவராச்சே....

stella / 11 months ago

Advertisement

Listen News!


விஜய் டிவியில் வரும் அக்டோபர் 1ம் தேதி பிரம்மாண்டமாக பிக் பாஸ் 7ம் சீசன் தொடங்க இருக்கிறது. வழக்கம்போல கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்க இருக்கிறார்.முன்பு எப்போதும் இல்லாத வகையில் இந்த சீசனில் மொத்தம் இரண்டு வீடுகள் இருக்க போகிறதாம். அதனால் போட்டி இன்னும் சுவாரஸ்யமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.  

மேலும் போட்டியாளராக யாரெல்லாம் வர போகிறார்கள் என நாளொரு செய்தி பரவிக்கொண்டிருக்கிறது.இந்த சீசனில் பப்லூ பிரித்விராஜ், ஜாக்குலின், மாகாபா ஆனந்த், பேருந்து ஓட்டுநர் ஷர்மிளா, தர்ஷா குப்தா, டான்ஸ் மாஸ்டர் ஸ்ரீதர், செய்திவாசிப்பாளர் ரஞ்சித் என பல பேர் கலந்துகொள்வார்கள் என கூறப்படுகிறது. 


இவர்களுள் கண்டிப்பாக அதிகப்படியான பேர்கள் நிகழ்ச்சியில் கலந்துகொள்வார்கள் எனவும் தெரிகிறது.மேலும் நேற்றைய தினம் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடித்து வரும் குமரனும் இணையப்போவதாக தகவல் வெளியாகியிருந்தது.


இதனை அடுத்து ரோபோ ஷங்கரின் மகளான இந்திரஜாவும் பிக்பாஸ் சீசன் 7 இல் கலந்து கொள்ளவுள்ளதாக கூறப்படுகின்றது. இதற்கு முதல் இவர் ஷு தமிழில் ஒளிபரப்பாகிய சர்வைவர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.



Advertisement

Advertisement