பாலிவூட் சினிமாவில் பல திரைப்படங்களில் நடித்திருந்தாலும் ஷாருகான நடிப்பில் வெளியான கபி ஹான் கபி நா என்ற படத்தில் நடித்ததன் மூலம் பிரபல்யமானவர் தான் நடிகை சுசித்ரா கிருஷ்ணமூர்த்தி.
சினிமாவில் ஒரு காலகட்டத்தில் பிஸியான நடிகையாக வலம் வந்த இவர் பிரபல தயாரிப்பாளரான சேகர் கபூரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு காவேரி என்னும் பெண் குழந்தையும் உள்ளது. இருப்பினும் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து விட்டனர்.
இந்நிலையில் அண்மையில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட சுசித்ரா கிருஷ்ணமூர்த்தி தனது வாழ்க்கையில் சந்தித்த பிரச்சனைகளை மனம் திறந்து கூறியுள்ளார். அதில், என் காவேரி குழந்தையாக இருக்கும் போதே நான் விவாகரத்து செய்துவிட்டேன். சிங்கிள் மதராக என் மகள் காவேரி கபூரை வளர்க்க மிகவும் கஷ்டப்பட்டேன்.
நான் என் மகளிடம் அதிகாரம் செலுத்தும் அம்மாவாக நடந்து கொள்ளவில்லை. நான் அவளிடம் நண்பரான இருக்க நினைத்து நாங்கள் இருவரும் நண்பர்கள் போல பழகினோம். ஆனால், காவேரி வளர்ந்ததும் என்மீது அதிகாரத்தை திணிக்கத் தொடங்கினாள் இதனால், நான் மனதளவில் துவண்டு போனேன் என்றார்.
மேலும், தனது மகள் காவேரி, என் பெயரை டேட்டிங் தளத்தில் இணைத்துவிட்டார் என்றும். ஆனால் அது எனக்குப் பிடிக்கவில்லை. இதுகுறித்து காவேரியிடம் பலமுறை பேசினேன். ஆனால், காவேரி டேட்டிங் செல்வதில் தவறு இல்லை என்று கூறி, அதில் தனது நண்பர்களை இணைத்து, அவர்களுடன் டேட்டிங் செல்லும்படி வற்புறுத்தினார்.
ஒரு கட்டத்தில் இது எனக்கு மிகவும் சலிப்பை ஏற்படுத்தியதால், அவளிடம் டேட்டிங் செல்ல முடியாது என்று கூறினேன். ஆனால், காவேரியோ உனக்காகத்தானே நான் டேட்டிங் குரூப்பில் உன்னை சேர்த்தேன் இப்போது, எதற்காக மறுக்கிறாய் என்று என்னிடம் கேள்வி எழுப்பினாள். அவள் அப்படி சொன்னது மிகவும் வலியை கொடுத்தது. உனக்காகத்தான் நான் அதில் சேர்ந்தேன் என அவளிடம் நான் ஓபனாக சொல்விட்டு இனிமேலும் அதை செய்ய முடியாது என மறுத்து விட்டேன் என்று அந்த பேட்டியில் கூறியுள்ளார்.
பெற்ற தாயை டேட்டிங்கிங் செல்லும்படி வற்புறுத்திய காவேரியின் செயல் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
பிற செய்திகள்
- விஜய்டிவி ஆஃங்கர் மாகாபா ஆனந்த் இத்தனை கோடி சொத்துக்கு சொந்தக்காரனா?-புதிதாக வெளியாகிய தகவல்
- நயன்தாராவின் திருமண சேலையில் ஹிந்தியில் எழுதப்பட்டிருந்த விடயம் இது தானா?- இது என்ன புது டுவிஸ்டாக இருக்கு
- தலைவர் 169 படத்தின் புதிய அப்டேட்டை நாளை வெளியிடவுள்ள படக்குழு- சன்பிக்சர்ஸ் வெளியிட்ட மறைமுகமான அறிவிப்பு
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!