ஒடிசா தொலைக்காட்சி தொடர்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகர் பிண்டு நந்தா. இவர் சின்னத்திரையில் இருந்த போதே ஏராளமான ரசிகர்களை கொண்டிருந்தமையால் சினிமா வாய்ப்புகள் தேடி வந்தன. இதனையடுத்து இவர் சுமார் 50இற்கும் மேற்பட்ட படங்களில் ஹீரோவாக நடித்துள்ளார். மேலும் ஹீரோவாக மட்டுமல்லாது வில்லன், காமெடி மற்றும் குணச்சித்திர கதாப்பாத்திரங்களிலும் நடித்துள்ளார்.
ஓடிசாவை சேர்ந்தவரான பிண்டு நந்தாவிற்கு தற்போது 45 வயதுதான் ஆகின்றது. இந்நிலையில் இவர் உடல்நலக்குறைவால் புவனேஷ்வரில் உள்ள தனியார் மருத்துவமனையில் முதலில் சிகிச்சை பெற்று வந்தார். அங்கு அவருக்கு கல்லீரல் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டதையடுத்து டெல்லியில் உள்ள கல்லீரல் மற்றும் பிலியரி சயின்ஸ் நிறுவனத்தில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
அவரது கல்லீரல் முற்றிலும் செயலிழந்த காரணத்தால் அவருக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் பரிந்துரைத்தனர். ஆனால் துரதிஷ்டாவசமாக நடிகர் பிண்டு நந்தாவுக்கு உடனடியாக மாற்று உறுப்பு கிடைக்கவில்லை.
இதனைத் தொடர்ந்து ஹைதராபாத்தில் உள்ள யசோதா மருத்துவமனையில் பிண்டு நந்தா அனுமதிக்கப்பட்டு அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதன் பின்னர் பிண்டு நந்தாவிற்கு அவரது உறவினர் ஒருவர் கல்லீரல் தானம் அளிக்க முன்வந்தார்.
இதனையடுத்து அவருக்கு உறுப்பு தான அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இருப்பினும் அந்தச் சிகிச்சை பலனின்றி நடிகர் பிண்டு நந்தா மரணமடைந்தார். அதாவது உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்த போது ரத்த ஒவ்வாமை ஏற்பட்டு பிண்டு நந்தா உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
திரையுலகில் தொடர்ந்து அடுத்தடுத்து பல உயிரிழப்புக்கள் இடம்பெற்று வருகின்ற நிலையில் நடிகர் பிண்டு நந்தாவின் இந்தத் திடீர் மரணமானது அவரது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இவரின் மறைவிற்கு சினிமா பிரபலங்கள் உட்படப் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
Listen News!