• Nov 14 2024

தமிழ் சினிமாவை உலுக்கிய இளம் நடிகையின் மரணம்! 22 வயதில் காதல் தோல்வி? ஏமாற்றிய பிரபலம் யார் தெரியுமா?

Aathira / 10 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் அவள் ஒரு தொடர்கதை என்ற படத்தின் மூலம் பிரபலமானவர் தான் ஜெயலட்சுமி.

1972 ஆம் ஆண்டு ஆந்திரா மாநிலத்தில் பிறந்த இவர், தீர்த்தயாத்ரா என்ற  மலையாள படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். இதை அடுத்து கே. பாலசந்தர் இயக்கிய அவள் ஒரு தொடர்கதை என்ற திரைப்படத்தில் நடித்தார்.

மலையாள சினிமா துறையில் சுப்ரியா என அழைக்கப்பட்ட இவரை, ஜெயலட்சுமி என பெயர் வைத்து சினிமாவில் அறிமுகம் செய்தவர் இயக்குநர் பாலச்சந்திரன்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான ரஜினி, கமல், சிரஞ்சீவி உட்பட பல்வேறு நடிகர்களுடன் நடித்த இவர், கிட்டத்தட்ட 66 படங்களில் நடித்து, முக்கிய நடிகைகளின் பட்டியலிலும் இடம் பிடித்தார். 


நடிகர் ரஜினிகாந்திற்கு மனைவியாக நடித்த ஜெயலட்சுமி 'முள்ளும் மலரும்' என்ற படத்தில் நித்தம் நித்தம் நெல்லுச்சோறு என்ற பாடல் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களையும் தன் பக்கம் கவர்ந்தெடுத்தார். 

எனினும், ஒரு நாள் அளவுக்கு அதிகமான தூக்கு மாத்திரைகளை உட்கொண்டு உயிரிழந்தார். அவரது உயிரிழப்பிற்கு காரணம் காதல் தோல்வி என்று பத்திரிக்கைகளில் செய்தி பரவின. 


அதன்படி,  எம்ஜிஆரின் அண்ணனான எம்ஜி.சக்கரபாணியின் மகன் எம்.சி.சுகுமாரை உயிருக்கு மேலாக ஜெயலட்சுமி காதலித்து வந்ததாகவும், அவர் மீது கொண்ட காதலால் தான் உழைத்த அனைத்து சொத்துக்களையும் அவருக்கு கொடுத்ததாகவும், ஒரு கட்டத்தில் சுகுமார் அவருக்கு துரோகம் செய்து விட்ட நிலையில், மனவேதனையில் இருந்த ஜெயலட்சுமி தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது.

இவ்வாறு காதல் தோல்வியால் 22 வயதிலேயே தனது வாழ்க்கையை முடித்துக் கொண்ட ஜெயலட்சுமி தவறான முடிவு தமிழ் சினிமாவை உலுக்கி உள்ளதாக இன்றளவில் மட்டும் பேசப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement