• Sep 21 2024

விஜய் ஆண்டனியின் மகளின் மறைவால் லியோ படக்குழு எடுத்த முடிவு

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் திரையுலகில் பிரபல இசையமைப்பாளராகவும், பாடகராகவும் இருப்பவர் விஜய் ஆண்டனி. காதலில் விழுந்தேன், டிஸ்யூம், வேட்டைக்காரன், அங்காடித் தெரு உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்து பிரபலமடைந்தார்.

அதுமட்டுமல்லாமல் நடிகராகவும் களமிறங்கி நான், காளி, பிச்சைக்காரன், சைத்தான் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். விஜய் ஆண்டனி தனது குடும்பத்தினருடன் சென்னை டிடிகே சாலையில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார். இவரது மகள் லாரா, சென்னை சர்ச் பார்க் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்தார்.

இந்நிலையில் மீரா இன்று அதிகாலை 3 மணியளவில் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர், அவரை மீட்டு உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.மருத்துவர்கள் அவரை பரிசோதனை செய்ததில், வரும் வழியிலேயே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் திரைத்துறையில் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.


 பலரும் தங்களுடைய சோகத்தை சோசியல் மீடியாவில் பகிர்ந்து வருகின்றனர்.இந்நிலையில் விஜய் நடித்துள்ள லியோ படத்தின் போஸ்டர் இன்று மாலை வெளியாக இருந்தது. தற்போது படக்குழு ட்விட்டர் பக்கத்தில், விஜய் ஆண்டனி சார் ஆழ்ந்த அனுதாபங்கள்.

எங்களுடைய பிராத்தனை உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் இருக்கும். இந்த மாதிரியான சூழ்நிலையால் லியோ படத்தின் போஸ்டரை நாளை வெளியிடுவோம் என்று அறிவித்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.



Advertisement

Advertisement