• Sep 20 2024

கே.கே எனும் மாயக்குரலோனின் மறைவு இசை உலகத்தில் ஒரு பேரிழப்பு- தி லெஜெண்ட் திரைப்பட இயக்குநர் தெரிவிப்பு

stella / 2 years ago

Advertisement

Listen News!

பிரபல பாடகர் கிருஷ்ண குமார் தனது 53 வது வயதில் நேற்றைய தினம் காலமானார். இவருடைய அகால மரணம் திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அவர் கொல்கத்தாவில் ஒரு நேரடி இசை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது அவர் நோய் வாய்ப்பட்டார். நிகழ்ச்சிக்கு பின்னர் தனது ஹோட்டலுக்குச் சென்ற கே கேவுக்கு திடீர் நெஞ்சு வலி ஏற்பட்டதை அடுத்து மயங்கி விழுந்துள்ளார். பின்னர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.

இவருடைய இந்த மரணத்தை ஏற்றுக்கொள்ள முடியாதநிலையில் பிரபலங்கள் தங்கள் அனுதாபங்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் கே.கே இறுதியாக பாடிய பாடலை தி லெஜெண்ட் படக்குழுவினர் படத்தின் ஆடியோவை வெளியிட்டுள்ளனர்.அந்த படத்திற்கு ஹரிஷ் ஜெயராய் இசையமைத்துள்ள நிலையில் அதில் இடம்பெறும் கொஞ்சி கொஞ்சி என்ற பாடலை கே.கேவுடன் பாடகி ஷ்ரேயா கோஷலும் பாடியிருந்தார்.

தற்போது மும்பையில் ஒளிப்பதிவின் போது கே.கே பாடிய வீடியோவை ட்விட்டரில் பதிவிட்டுள்ள லெஜெண்ட்படத்தின் இயக்குநர்கள் ஜேடி – ஜெர்ரி “கே.கே எனும் மாயக்குரலோனின் மறைவு இசை உலகத்தில் ஒரு பேரிழப்பு அவரோடு எங்கள் தி லெஜண்ட் படத்திற்கு சமீபத்தில்தான் கொஞ்சி கொஞ்சி பாடலை மும்பையில் ஒளிபதிவு செய்தோம்.

என்ன ஒரு உற்சாகம் ஆர்வம் , commitment எத்தனை முறை பாடினாலும் energy குறையாத குரல் பழகுவதற்கு இனிமை ,பாடலின் தனித்துவம் சந்தித்த சில மணி நேரத்திலேயே ரொம்ப நாள் பழகிய உணர்வை ஒரு சிலரால் தான் முடியும்

எங்களுக்குப் பாட வந்திருந்தாலும் எங்களை ஒரு guest போல கவனித்தது ரொம்ப அபூர்வமான குணம் காலத்திற்கும் காதில் வாசம் செய்யும் பாடலை பாடிய அந்த கலைஞன் இப்போது இல்லை என்பதை நம்ப மறுக்கிறது.மனம் வாழ்வின் நிலையாமைச் சொல்லி செல்லும் நாட்கள் எங்களது ஆழ்ந்த வருத்தத்தை பதிவு செய்கின்றோம் என்று தெரிவித்துள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement