• Nov 14 2024

செம்பி படத்தில் இருந்து நீக்கப்பட்ட வசனம்..திடீரென கேள்வி கேட்கும் ரசிகர்கள்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

பிரபு சாலமன் இயக்கத்தில் கடந்த 30ஆம் தேதி திரைக்கு வந்த படம்  தான் செம்பி. முதல் நாளில் இருந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் இப்படத்தில் கோவை சரளா, அஸ்வின், நிலா உள்ளிட்டோர் பலர்  நடித்துள்ளனர்.

மேலும் இப்படத்தில் இடம்பெறும் முக்கிய காட்சி ஒன்றில் முக்கிய வசனத்தை நீக்கியுள்ளார்கள். இது தற்போது ரசிகர்கள் கவனித்து சோசியல் மீடியாவில்  கேள்வி கேட்டு வருகிறார்கள்.

செம்பி படத்தில் இடம்பெறும் ஒரு காட்சியில் அரசியல் வாதி ஒருவர் செம்பியிடம் வந்து 'எனக்கு ஓட்டு போடு நான் உன்னை டாக்டர் ஆக்கி விடுகிறேன்' என்று  சொல்கிறார். அதை கேட்டுவிட்டு தனது பாட்டியுடன் செம்பி சென்றுவிடுவார்.


இதன்பின் நடந்து செல்லும் நேரத்தில் தனது பாட்டியிடம் 'பாட்டி நீ அந்த அரசியல் வாதி நிற்கும் சின்னத்தில் ஓட்டு போட்டுவிடு, அவர் என்னை டாக்டர் ஆக்கிவிடுகிறேன் என்று கூறியுள்ளார்' என செம்பி சொல்வார்.

எனினும் அதற்க்கு பாட்டியாக நடித்துள்ள கோவை சரளா ' எவனுக்கு ஓட்டு போட்டாலும் நீ டாக்டர் ஆக முடியாது, நீ நல்லா படிச்சா தான் டாக்டர் ஆக முடியும் ' என்று  சொல்வார்.

இந்த காட்சியில் இடம்பெறும் இந்த வசனம் திரையரங்கில் Mute செய்யப்பட்டுள்ளது. இதனை கவனித்த ரசிகர்கள் ஏன் இந்த வசனத்தை Mute செய்தீர்கள் என்று சோசியல் மீடியாவில் கேள்வி கேட்டு வருகிறார்கள்.

Advertisement

Advertisement