இயக்குநர் லிங்குசாமி இயக்கத்தில் பிரபல தெலுங்கு நடிகரான ராம் பொத்தினேனி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான்’தி வாரியர்’. இப்படத்தில் கதாநாயகியாக கீர்த்தி ஷெட்டி நடித்துள்ளார். இவர்களுடன் ஆதி, நதியா உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்திருக்கின்றனர்.
இத் திரைப்படம் ஜூலை 14ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு அண்மையில் நடைபெற்றது. இதில் இயக்குநர் லிங்குசாமி, உள்ளிட்ட படக்குழுவினருடன் இயக்குநர்கள், பாரதிராஜா, மணிரத்னம், ஷங்கர், நடிகர் விஷால் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
இந்த நிகழ்வில் ’தி வாரியர்’ படத்திற்கான டைட்டில் உருவான விதம் குறித்து பேசிய லிங்குசாமி, “ஷூட்டிங் போவதற்கு முன்பாக டைட்டில் முடிவு செய்ய வேண்டும் என்பதால் ஒவ்வொருத்தராக ஒரு டைட்டில் சொன்னார்கள். எதுவுமே செட்டாகவில்லை. பப்ளிசிட்டி வேலையை ஆரம்பிக்க வேண்டும் என்பதால் சீக்கிரம் டைட்டில் சொல்லுங்கள் என்று தயாரிப்பாளரும் கேட்டார்.
அதன் பிறகு, டைட்டில் சொல்பவர்களுக்கு ஒரு லட்சம்னு சொல்லலாமா என்று கேட்டார். பின் அதை அறிவித்ததும் உதவி இயக்குநர்கள் வரிசையாக டைட்டில் சொன்னார்கள். ’மனசெல்லாம்’ பட இயக்குநர் சந்தோஷ் என்னுடன் இருந்தார். அவரிடம் டைட்டில் சொல்லி இது எப்படி இருக்கிறது என்று கேட்டால் வேண்டாம் என்று சொல்வார். வரிசையாக ஒவ்வொரு டைட்டிலையும் நிராகரித்தார். நான் நூறு டைட்டில் கார்டு எழுதியவன் என்ற முறையில் சொல்கிறேன், இதுவெல்லாம் ஒத்துவராது என்று சொல்லிக்கொண்டே இருந்தார். ஒருநாள், நான் ஒரு டைட்டில் சொல்லலாமா என்று சந்தோஷ் கேட்டார். நான் சரி சொல்லுங்கள் என்றதும் வாரியர் என்றார்.
இந்தப் படத்திற்கு அதைவிட பொருத்தமான டைட்டில் வைக்க முடியாது. அதனால் ஏற்கனவே சொன்னபடி ஒரு லட்ச ரூபாயை இந்த விழாவில் வைத்து சந்தோஷிற்கு வழங்குகிறேன்" என்றார்.மனசெல்லாம் படத்தை இயக்கிய சந்தோஷ், தேர்ந்த ஓவியரும் புகைப்படக் கலைஞரும் என்பது குறிப்பிடத்தக்கது.
பிற செய்திகள்
- சாய் பல்லவியின் அசத்தலான நடிப்பில் உருவாகியுள்ள கார்கி திரைப்படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ்
- இரு பெரும் ஹீரோக்களுக்கு வில்லனாகும் நடிகர் விஜய் சேதுபதி
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!