• Sep 20 2024

இயக்குநரால் 'மாமன்னன்' பட ரிலீசுக்கு ஏற்பட்ட சிக்கல்..! உதயநிதிக்கு இப்படியொரு நிலைமையா?

Jo / 1 year ago

Advertisement

Listen News!

இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி, வடிவேலு ஆகியோர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் மாமன்னன். இப்படம் உதயநிதியின் கடைசி படம் என்றதால் அரசியல் தொண்டர்கள் மற்றும் சினிமா ரசிகர்கள் இப்படத்தை எதிர்பார்த்தனர். ஆனால் அதையும் மீறி தேவர் மகன் சர்ச்சையால் படத்தின் எதிர்பார்ப்பு கூடுதலானது.

கமலின் தேவர் மகன் படத்தை மாரி செல்வராஜ் சாதியை படம் என்று குறிப்பிட்டிருக்கிறார். மேலும் அதில் இடம்பெறும் இசைக்கியை வைத்து தான் மொத்த கதையையும் எடுத்துள்ளாராம். இவர் இந்த விஷயம் சொன்னதிலிருந்தே இணையத்தில் மிகப்பெரிய பிரளயமே ஏற்பட்டிருக்கிறது.

பெரும்பாலானோர் கமலுக்கும், தேவர் மகன் படத்திற்கும் ஆதரவு அளித்து வருகிறார்கள். மேலும் மாரி செல்வராஜின் பரியேறும் பெருமாள், கர்ணன் போன்ற படங்களுக்கு ஆதரவு கொடுத்த ரசிகர்கள் கூட இப்போது அவரை சாடி வருகிறார்கள். இதற்கெல்லாம் காரணம் வாய் துணுக்கு மாரி செல்வராஜ் கூறிய விஷயம் தான்.

அதுமட்டுமின்றி தேவர் மகன் படத்தில் இசக்கி கதாபாத்திரமும் தேவர் சமூகத்தைச் சார்ந்தவர் தான். இதில் எப்படி இப்படம் சாதிய படமாக இருக்கும் என பலர் கேள்வி எழுப்பி வருகிறார்கள். இந்நிலையில் மாமனான் ரிலீஸ் தேதி நெருங்கும் சமயத்தில் பல இடங்களில் படத்தை வெளியிட எதிர்ப்பு கிளம்பி வருகிறது.

அந்த வகையில் மாமன்னன் படத்தை திரையிட்டால் தேனி வெற்றி திரையரங்கில் தாக்குதல் நடத்தப்படும் என சில கட்சியினர் எச்சரித்து திரையரங்கு மேலாளிடம் மனு கொடுத்து இருக்கின்றனர். பொதுவாக பிரச்சனை உள்ள படங்களை உதயநிதி தலையிட்டு தான் வெளியிடுவார்.எனவே என்ன நடக்கிறது என பொறுத்திருந்து பார்ப்போம்.


Advertisement

Advertisement