பைரேட்ஸ் ஆப் தி கரீபியன்' என்ற படத்தின் மூலம் அனைத்து மொழி ரசிகர்களிடையேயும் பிரபல்யமானவர் தான் ஜானி டெப்.இவர் கடந்த 2015ம் ஆண்டு நடிகை ஆம்பர் ஹெர்ட்டை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
அத்தோடு இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்ததை அடுத்து பத்திரிகை ஒன்றில் ஜானி டெப் பற்றி ஆம்பர் எழுதியது சர்ச்சையை உண்டாக்கியது.
ஜானி டெப் தன்னை குடித்து விட்டு துன்புறுத்தியதாகவும், செக்ஸ் டார்ச்சர் செய்ததாகவும் அவர் கூறியிருந்தார். இதனால் ஜானி டெப்பின் இமேஜ் பறிபோனது, அவர் நடிக்க இருந்த படங்களும் கைநழுவி போனது.
இதனால் ஆம்பர் எழுதிய கட்டுரை தன்னையும் தன் தொழிலையும் பாதித்ததாகக் கூறி, நஷ்டஈடு கேட்டு அவதூறு வழக்குத் தொடுத்தார் ஜானி டெப். வழக்கின் முடிவில் ஜானி டெப்புக்கு ஆதரவாக நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது.
ஜானிடெப்புக்கு இந்திய மதிப்பில் சுமார் 120 கோடி ரூபாய் நஷ்டஈடு கொடுக்க ஆம்பருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. அவ்வளவு பணத்துக்கு நான் எங்கே போவேன் என்று ஆம்பர் கதறி அழ, அந்த பணமே வேண்டாம் என்று சொல்லி விட்டார் ஜானி டெப்.இதற்காக அவர் பார்ட்டி வைத்தெல்லாம் கொண்டாடினார்.
இந்த நிலையில் இவர்களின் வழக்கு 'ஹாட் டாக் : தீ டீப் ஹார்ட் டிரையல்' என்ற பெயரில் திரைப்படமாக தயாராகி உள்ளது.இப்படம் நிஜகாட்சிகளும், கற்பனை காட்சிகளும், நிஜமான பேட்டிகளும் இணைந்த படமாக இருக்கும் என்றும் கருதப்படுகின்றது.
இப்படத்தில் ஜானி டெப் கேரக்டரில் மார்க் ஹாப்கா நடித்திருக்கிறார். மேகன் டேவிஸ் ஆம்பர் ஹெர்ட் பாத்திரத்தில் நடித்திருக்கிறார்.இப்படம் செப்டம்பர் 30ம் தேதி ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!