• Sep 20 2024

ரெட் ஜெயண்ட் நிறுவனத்தில் நிகழ்ந்த அதிரடி மாற்றம் - திடீரென தனது பெயரை தூக்கிய உதயநிதி- ஓ இது தான் காரணமா?

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் கடந்த 2008-ம் ஆண்டு வெளியான குருவி என்னும் திரைப்படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமாகியவர் தான் உதயநிதி ஸ்டாலின். இப்படத்தை இவரின் ரெட்  ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தான் தயாரித்து இருந்தது.இதனையடுத்து ஆதவன், மன்மதன் அம்பு என பல படங்களை தயாரித்தார்.

தொடர்ந்து ஒரு கல் ஒரு கண்ணாடி என்னும் திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகி பல திரைப்படங்களில் நடித்து வந்தார். மேலும் அண்மையில் விளையாட்டுத்துறை அமைச்சராக பதவியேற்றதால் மாமன்னன் தான் தனது இறுதிப்படம் என்றும் தெரிவித்திருந்தார்.


இருப்பினும் தனது ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் மூலம் தொடர்ந்து படங்களை தயாரிக்கவும், விநியோகம் செய்வேன் என்றும் அவர் கூறி இருந்தார். இந்நிலையில், தற்போது அந்த ரெட் ஜெயண்ட்டிலும் அதிரடி மாற்றம் நிகழ்ந்துள்ளது. இதுவரை ரெட் ஜெயண்ட்டின் லோகோ திரையிடப்படும்போது உதயநிதி ஸ்டாலின் வழங்கும் என குறிப்பிடப்பட்டு இருக்கும்.


ஆனால் தற்போது, அதிலிருந்து உதயநிதியின் பெயரை தூக்கிவிட்டு ரெட் ஜெயண்ட் மூவீஸ் வழங்கும் என்று குறிப்பிடுமாறு உத்தரவிட்டுள்ளனர். இதன்மூலம் இனி ரெட் ஜெயண்ட் வெளியிட உள்ள செம்பி, துணிவு, வாரிசு (4 ஏரியா), விடுதலை, பொன்னியின் செல்வன் 2 போன்ற படங்களில் ரெட் ஜெயண்ட் மூவீஸ் வழங்கும் என்பது தான் லோகோவில் இடம்பெற்று இருக்கும் என தெரியவந்துள்ளது. உதயநிதி அமைச்சர் ஆகிவிட்டதால் அவரது பெயர் அதிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.









Advertisement

Advertisement