• Sep 21 2024

விஜய்யின் 68வது படத்தில் மூன்றாவது தடவையாக இணையவுள்ள இரட்டையர்கள்.

sarmiya / 11 months ago

Advertisement

Listen News!

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் விஜய். இவர் நடிப்பில் உருவான லியோ படத்தின் வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் லியோ படத்தை அடுத்து வெங்கட் பிரபு இயக்கும் தளபதி 68 வது படத்தில் நடிக்கப் போகிறார் விஜய். 

இரண்டு வேடங்களில் விஜய் நடிக்கும் இந்த படத்தில் சினேகா, பிரியங்கா மோகன், பிரசாந்த், பிரபுதேவா, அரவிந்த்சாமி என்ன பலர் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கும் இந்த படத்தில்  சண்டை பயிற்சியாளர்களாக அன்பறிவு என்ற இரட்டையர் இணைந்துள்ளார்கள் என தகவல்கள் வெளியாகி இருக்கின்றது.


இவர்கள் இருவரும்  விஜய்யின் பீஸ்ட், லியோ போன்ற படங்களிலும் ஏற்கனவேை பணியாற்றி உள்ளார்கள். அந்த வகையில் மூன்றாவது முறையாக இவர்கள் விஜய்யின்  68 வது படத்திலும் தற்போது இணைந்துள்ளார்கள். இப் படத்தின் பூஜை அக்டோபர் இரண்டாம் தேதி நடைபெறுவதாக
நடைபெற இருப்பதாகவும்,  நவம்பரில் படப்பிடிப்பு தொடங்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.


Advertisement

Advertisement