பெங்களூர் மாநிலத்தை சேர்ந்தவர் நடிகை சுவாதி சதீஷ். இவர் எஃப்.ஐ.ஆர்., 6 to 6 உள்பட பல படங்களில் நடித்திருக்கிறார். இவருக்கு மூன்று வாரத்திற்கு முன்பாக பல் வலி ஏற்பட்டுள்ளது இதைத்தொடர்ந்து தனியார் மருத்துவமனையை அணுகி உள்ளார். அங்கு அவருக்கு ரூட்கேனல் முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டு இருந்தது.
அதன் பின்னர் முகம் வீங்கி காணப்பட்ட சுவாதி இந்த வீக்கம் எப்போது குறையும் என்று மருத்துவர்களிடம் கேட்டுள்ளார். அதற்கு அவர்கள் இரண்டு மூன்று நாட்களில் குறைந்துவிடும் என்று கூறியுள்ளார்கள்.
ஆனால் மூன்று வாரங்கள் கடந்துள்ள நிலையில் சுவாதிக்கு வீக்கம் குறையவில்லை தற்போது அவரை பார்த்தவுடன் இவர் சுவாதி தானா? என்று சந்தேகம் ஏற்படுமளவுக்கு முகத்தோற்றம் மாறியது.
இதுபற்றி மருத்துவமனையில் கேட்டபோது சரியான தகவல்களை அளிப்பதில்லை என்று சுவாதி குற்றம்சாட்டியுள்ளார். தற்போது அவர் வேறு மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வருகிறார். தவறான மருந்து அளிக்கப்பட்டதால் முகத்தோற்றம் மாறி இருக்கக்கூடும் என்ற குற்றச்சாட்டு தற்போது பரவி வருகின்றது.
பிற செய்திகள்
- குறுகுறு பார்வையில் இளசுகளின் மனதைக் கொள்ளை கொள்ளும் கியாரா- லேட்டஸ்ட் போட்டோ சூட்
- நடிகை அனுஷ்கா சர்மா இரண்டாவது முறையாக கர்ப்பமாக உள்ளரா?- ஹாஸ்பிட்டலுக்கு அழைத்து சென்ற விராட் கோலி
- சக்சஸ் மீட்டில் கலந்து கொண்ட கமல்ஹாசன் இத்தனை விஷயங்களை கூறியிருக்கிறாரா?
- நீ கொஞ்சம் சிந்தித்தால் உண்மை புரியும்- சாய் பல்லவியை கண்டித்த பிரபல நடிகை
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!