பாலிவுட் திரையுலகின் பிரபல நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் அமீர்கான். இவரின் நடிப்பில் தற்போது உருவாகியிருக்கும் திரைப்படம் 'லால் சிங் சத்தா'. இப்படமானது ஆகஸ்ட் 11-ஆம் திகதி வெளியாக இருக்கின்றது. அதுமட்டுமல்லாது தமிழ், இந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளிலும் தயாராகி இருக்கின்றது. இந்த படத்தினை ரெட் ஜெயின்ட் மூவிஸ் வெளியிடுகிறது.
இந்நிலையில் இந்த படத்தின் உடைய சந்திப்பொன்று சமீபத்தில் இடம்பெற்றிருந்தது. அதில் தயாரிப்பாளரும், கதையின் நாயகனுமான அமீர்கான், படத்தை தமிழகம் முழுவதும் வெளியிடும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் உதயநிதி ஸ்டாலின், படத்தின் இயக்குநர் அத்வைத் சந்தன், நடிகை மோனாசிங், படத்தினை தயாரித்திருக்கும் 'வயாகாம் 18' எனும் பட தயாரிப்பு நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி அஜித் ஆந்த்ரே உள்ளிட்ட பலர் கலந்து சிறப்பித்திருந்தனர்.
அதில் பேசிய உதயநிதி "நான் அமீர் கானின் தீவிர ரசிகர் என்றும் அவர் படத்தை பள்ளி வகுப்பை கட் அடித்துவிட்டு பார்த்துள்ளேன்" எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும் இது தொடர்பாக அவர் கூறுகையில் ''நான் அமீர்கானின் தீவிர ரசிகன். இதன் காரணமாகவே அவரது நடிப்பில் வெளியாகும் 'லால் சிங் சத்தா' திரைப்படத்தை தமிழகம் முழுவதும் வெளியிடுகிறோம் என எண்ண வேண்டாம். 'லால் சிங் சத்தா' ஒரு அமோக படைப்பு, அனைவரும் கண்டு ரசிக்க வேண்டிய நேர்த்தியான படைப்பு '' எனவும் கூறியிருக்கின்றார்.
மேலும் "நான் பள்ளியில் படித்துக் கொண்டிருந்த காலத்தில் வகுப்பை 'கட்'டடித்துவிட்டு அமீர் கானின் 'ரங்கீலா' படத்தை பார்த்திருக்கிறேன். அந்த அளவிற்கு நான் அமீர் கானின் ரசிகன்" எனவும் கூறியிருக்கின்றார். அத்தோடு "மாதந்தோறும் இரண்டு திரைப்படங்களையாவது ரெட் ஜெயன்ட் மூவிஸ் வெளியிடுகிறது. இதனை தவிர்ப்பதற்கு பலமுறை முயற்சித்தாலும், திரையுலக நண்பர்களுக்காக தரமான படங்களைத் தொடர்ந்து வெளியிட்டு வருகிறோம்.
அந்தத் தருணத்தில் அமீர்கான் தயாரிப்பில் உருவாகி இருக்கும் 'லால் சிங் சத்தா' படத்தினை தமிழில் வெளியிடுவதற்காக எங்களை தொடர்பு கொண்டார்கள். நாங்கள் அதை முதலில் வேண்டாம் என்று மறுக்க நினைத்தோம். தமிழ் திரைப்படங்களே போதும். ஹிந்தி திரைப்படங்கள் வேண்டாம் என்றும் எண்ணினோம்.
திடீரென்று ஒரு நாள் அமீர் கான் வீடியோ காலில் தொடர்பு கொண்டு, 'லால் சிங் சத்தா' படத்தினை நீங்கள் வெளியிட வேண்டும் என கோரிக்கை வைத்தார்" அவரின் அன்பான வேண்டுகோளைத் தொடர்ந்து நாங்களும் இப்படத்தை வெளியிடுவதற்கு ஓகே சொன்னோம் எனக் கூறியிருந்தார்.
பிற செய்திகள்
- கரண் ஜோகர் பற்றி ஓப்பனாகப் பேசிய டாப்ஸி…!
- விஜய் இப்படி நடிக்க வேணும்… ஒரு ரசிகனாக என்னுடைய ஆசை… கமல் ஹாசன் கூறிய அந்தப் பதில்..!
- தனிமையில் இனிமை காணும் பிரியங்கா மோகனன்..! அதுவும் நவநாகரிக உடையிலா..?
- இறைச்சி விற்பனை நிறுவனத்தின் தூதுவரான நயன்தாரா… காரணம் என்ன..?
- குடும்பத்துடன் சென்று மீனாவை சந்தித்த பிரபலங்கள்… துயரத்திலிருந்து மீண்டெழுந்து விட்டாரா…?வைரலாகும் புகைப்படங்கள்..!
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!