• Nov 11 2024

அனுஷ்காவை உருகி உருகி காதலித்த பிரபல நடிகர் - யார் தெரியுமா?

Jo / 1 year ago

Advertisement

Listen News!

நடிகை அனுஷ்கா செட்டி யோகா ஆசிரியராக இருந்து, நடிப்புத் துறைக்கு வந்தவர். இன்றுவரை இவருடைய அழகு சினிமா ரசிகர்களாலும், பிரபலங்களாலும் போற்றப்பட்டு வருகிறது. 

அனுஷ்கா தமிழ் சினிமாவில் இயக்குநர் சுந்தர் சி இயக்கத்தில் இரண்டு திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி இருந்தாலும், அருந்ததி திரைப்படம் தான் அவரை ஒட்டுமொத்த இந்திய ரசிகர்களிடமும் கொண்டு சேர்த்தது. அதன் பின்னர் தமிழில் வேட்டைக்காரன், என்னை அறிந்தால், இரண்டாம் உலகம் போன்ற பல படங்களில் நடித்திருக்கிறார்.

இரண்டாம் உலகம் திரைப்படத்தின் நடித்துக் கொண்டிருக்கும் போது நடிகர் ஆர்யாவுக்கு அனுஷ்கா மீது பயங்கரமான காதல் இருந்ததாக சொல்லப்படுகிறது. ஆர்யாவை பொறுத்த வரைக்கும் தமிழ் சினிமாவில் காதல் மன்னன் ஆகவும், பிளே பாய் ஆகவும் இருந்தவர். பல நடிகைகளும் அவர் மீது காதலில் இருந்த காலத்தில், ஆர்யா விரும்பி காதலித்தது அனுஷ்காவை தானாம்.

ஆனால் அனுஷ்கா ரொம்ப தெளிவாக இதற்கெல்லாம் பிடி கொடுக்காமல் படப்பிடிப்பு வேலைகளை முடித்துவிட்டு சிட்டாக பறந்து விட்டார். 

பாகுபலி பட சமயத்தில் அனுஷ்கா மற்றும் பிரபாஸ் இருவரும் காதலிப்பதாக ஒட்டுமொத்த இந்திய மீடியாவும் செய்திகளை வெளியிட்டது. மேலும் இவர்கள் இருவரது திருமணத்திற்கும் பிரபாஸ் வீட்டில் சம்மதம் தெரிவிக்கவில்லை எனவும் சொல்லப்பட்டது. ஆனாலும் அனுஷ்கா மற்றும் பிரபாஸ் இருவரும் லிவிங் ரிலேஷன்ஷிப்பில் இருப்பதாக தெலுங்கு மீடியாக்கள் செய்திகள் எழுத ஆரம்பித்தன.

பாகுபலி திரைப்படம் ரிலீஸ் ஆகி பல வருடங்கள் ஆகியும், இன்றுவரை தெலுங்கு மீடியாக்கள் இவர்கள் இருவரும் லிவிங் ரிலேஷன்ஷிப்பை தொடர்வதாக சொல்லிக் கொண்டுதான் இருக்கின்றன. ஆனால் அனுஷ்கா மற்றும் பிரபாஸ் தரப்பிலிருந்து இதுவரை இது போன்ற செய்திகளுக்கு எந்த பதிலும் கொடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement